ஒரு செல்வரின் வீட்டில் திருட்டுப் போய் விட்டது அவர் ஏக்கமுற்று ஒருநாள் ஸூர்தாஸ் சுவாமிகளிடம் குறி கேட்டார்.
அதற்கு சுவாமிகள், “அடடா! உன் பொருள்களா போய்விட்டன? உனக்குப் பொருள் ஏது? பகவான் தன் பொருளைத்தானே உன்னிடம் அடைக்கலமாகக் கொடுத்திருந்தார்? என்றார்.
செல்வர் கோபத்துடன், "என் பொருள்தானையா; அவற்றை அடைக்கலப் பொருள் என்று சொல்லுகிறீர்களே'' என்றார்.
அதற்கு சுவாமிகள், "அப்படியா! நீ இந்த உலகிற்கு வரும்போது கொண்டு வந்தாயா?'' என்றார். செல்வர், "இல்லை'' என்றார்.
உடனே சுவாமிகள், "அப்படியானால் கொண்டு போகப் போகிறாயா?" என்று கேட்டார். செல்வர், “இல்லை’' என்றார்.
''எனவே அது அடைக்கலப் பொருள்தானே! உனக்குச் சொந்தம் என்று எப்படிக் கூறினாய்?" என்றார் சுவாமிகள். செல்வர் வெட்கி வீடு திரும்பினார்.