இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

பண்டரிபுரம் கோயில் தோன்றிய கதை

புண்டரீகன், மனைவியே கதி என்று வாழ்ந்து வந்தான். அவள் சொன்னபடி அவன் ஆடுவான், பெற்றோர்களிடம் ஒரு சிறிதும் அவனுக்கு அன்போ, மரியாதையோ கிடையாது.

ஒருசமயம் அவனும் அவனுடைய மனைவியும் காசிக்குப் பயணம் செய்தார்கள். பயணம் சில நாட்களுக்குத் தொடர்ந்தது. காசியை அடையச் சில மைல் தூரம் இருந்த போது இரவு சூழ ஆரம்பித்தது. ஆகவே அவர்கள் இருவரும் வழியிலிருந்த ஒரு கிராமத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலையில், காசிக்குப் புறப்பட முடிவு செய்தனர்.

அதன்படியே அவர்கள் ஒரு சிறிய குடிசை வீட்டுத் திண்ணையில் அன்றைய இரவுப்பொழுதைக் கழித்தார்கள்.

மறுநாள் அதிகாலையில் விடிவதற்குச் சற்று முன்பு, புண்டரீகன் தூக்கம் கலைந்து கண் விழித்தான். அப்போது அவன் தங்கியிருந்த குடிசையை நோக்கி மூன்று அழகான பெண்கள் வந்தார்கள். அவர்கள் அந்த வீட்டின் வெளிப்புறத்தைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாகத் துப்புரவு செய்தனர். பிறகு சாணம் தெளித்து அழகிய கோலங்களைப் போட்டு அலங்கரித்தார்கள்.

அவர்களுடைய தோற்றங்களையும் செய்கைகளையும் கண்ட புண்டரீகனுக்கு வியப்புத் தாங்க முடியவில்லை. 'இந்த வீடோ மிகமிகச் சிறியது. இந்தக் குடிசைக்குச் சொந்தக்காரர் மிகவும் ஏழையாகத்தான் இருப்பார் என்பதிலும் சந்தேகமில்லை. அப்படி ஏழையாக உள்ள ஒருவர், அரசகுமாரிகளைப்போன்ற மூன்றுபேரை பணிப்பெண்களாக எப்படி வேலைக்கு வைத்துக்கொள்ள முடியும்?' என்று அவன் நினைத்து ஆச்சரியப்பட்டான்.

ஆதலால் அவன் அந்தப் பெண்களை நெருங்கிச்சென்று, ''அம்மா! நீங்கள் யார்? உங்களைப் பார்த்தால் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப்போல இருக்கிறதே! உங்களை வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடிய பணவசதி இந்த வீட்டுக்காரருக்கு இருக்கிறதா?'' என்று விசாரித்தான்.

அவனுடைய கேள்விக்குப் பதிலாக அந்தப் பெண்கள், ''ஐயா, நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் மூன்று நதிகளுடைய தேவதைகள். எங்க ளுடைய பாவங்களைப் போக்கிக்கொள்வதற்காக இந்த வீட்டில் உள்ள பெரியவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருக்கிறோம்'' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்.

மறுநாள் காலையில் பொழுது நன்றாகப் புலர்ந்த பிறகு, புண்டரீகன் அந்த குடிசைக்குள் சென்றான். அங்கு ஒரு முதியவர் இருந்தார். புண்டரீகன் அவரை வணங்கிவிட்டு, ''பெரியவரே, காசி இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது'' என்று கேட்டான்.


முதியவர், ''அப்பா, காசிக்கு நான் போனதில்லை. அந்த ஊர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்ற விவரமும் எனக்குத் தெரியாது'' என்று சொன்னார்.

புண்டரீகன் அவரிடம் பேசி, அவருடைய வரலாற்றைச் சொல்லும்படி வேண்டினான்.

பெரியவர் தம்மைப் பற்றி அதிகமாகச் சொல்ல விரும்பவில்லை. ஒருசில விவரங்களை மட்டுமே அவர் தெரிவித்தார். அதிலிருந்து அவர் பெற்றுள்ள சிறப்புக்கான காரணம் புண்டரீகனுக்கு விளங்கியது. வயதான தமது பெற்றோர்களுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளைச்செய்து வந்த காரணத்தாலேயே, அந்த முதியவரின் உள்ளம் பரிபக்குவத்தைப்பெற்று ஒரு மகானின் நிலையை அடைந்திருந்தது.

பெற்றோர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்துவந்த காரணத்தாலேயே இப்படிப்பட்ட பெரும்சிறப்பை இவர் பெற்றிருக்கிறார் என்பதை அறிந்தபோது, புண்டரீகன் வியப்படைந்து போனான். அதோடு, தான் தனது பெற்றோர்களிடம் எப்படி நடந்துகொண்டோம் என்று நினைத்தும் அவன் வெட்கப்பட்டான்.

அதுமட்டுமின்றி, காசிக்கு மேற்கொண்டு பயணத்தைத் தொடரும் எண்ணமும் அவனைவிட்டு அகன்றது. தனது பெற்றோர்களுக்குப் பணிவிடைகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பெற்றுப் புண்டரீகன் விரைந்து தனது ஊருக்குத் திரும்பினான்.

ஊர் திரும்பிய புண்டரீகனின் வாழ்க்கையே அடியோடு மாறிவிட்டது. அல்லும் பகலும் அயராமல் அவன் தனது பெற்றோர்களுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளைச் செய்தான். அவர்களுக்குப் பணிவிடை செய்வது ஒன்றையே தனது வாழ்க்கையின் தலையாய இலட்சியமாக வைத்துக்கொண்டான்.

இந்த நிலையில் ஒருநாள், புண்டரீகன் வழக்கப்படி தனது தந்தைக்குச் செய்யவேண்டிய பணிவிடையில் ஈடுபட்டிருந்தான். அப்போது பகவான் தரிசனம் தந்து, ''உன்னுடைய பெற்றோர்களுக்கு பக்தி சிரத்தையுடன் சிறந்த முறையில் நீ சேவை செய்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அந்த சமயத்தில் புண்டரீகன் தனது தந்தைக்காகச் சில வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. ஆகவே அவன் இரண்டு செங்கற்களை பகவானின் எதிரில் வைத்து, ''சுவாமி, இதன்மேல் கொஞ்சநேரம் எழுந்தருளியிருங்கள். இதோ எனது தந்தையைக் கவனித்துவிட்டு விரைவில் வந்து விடுகிறேன்'' என்று சொல்லிக்கொண்டே தந்தையிடம் சென்றான்.

தந்தையை நீராடச் செய்து, அவரது உடலை ஈரம் நீங்க நன்றாகத் துடைத்துவிட்டான். அவருக்கு வேறு ஆடைனய உடுத்திவிட்டான். பிறகு அவரை உணவருந்துவதற்கு அழைத்துச்சென்று, தானே அவருக்கு உணவை ஊட்டினான். இவ்விதம் தனது கடமைகளை முடித்துக்கொண்டவுடன், புண்டரீகன் பகவான் இருந்த இடத்திற்கு விரைந்து ஓடோடி வந்தான்.

பகவான், அவன் சுட்டிக்காட்டிவிட்டுச் சென்றிருந்த கல்லின்மேலேயே நின்றிருந்தார். அவன் வருவதற்காகக் காத்திருந்தார்!

பகவானைப் புண்டரீகன் பணிந்து வணங்கி, ''சுவாமி, தாமதிக்க வைத்த தற்காக மன்னிக்கவேண்டும்'' என்று மனப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டான்.

பகவான், ''குழந்தாய்! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்று சொன்னார்.


புண்டரீகன், பெரியோர்களின் இயல்பிற்கேற்ப, தான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற விரும்பினான்.

ஆகவே அவன், ''இறைவா, தங்களுடைய தரிசனத்தை அடியேன் பெறும்படியான பாக்கியத்தை எனக்குக் கொடுத்தீர்கள். அதைப்போலவே எல்லா மக்களும் உங்களுடைய தரிசனத்தைப்பெற்று உய்வு பெறும் வகையில், தாங்கள் எப்போதும் இந்தக் கல்லின்மேலேயே எழுந்தருளியிருந்து பக்தர்களுக்குத் தரிசனம் தரவேண்டும். இதையே தங்களிடம் வரமாகப் பிரார்த்திக்கிறேன்'' என்று நா தழுதழுக்கக் கூறினான்.

கருணைக்கடலான பகவான் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தார். அவர் இடத்தையே தமது சான்னித்தியமாகவும் வைத்துக்கொண்டார். இப்போதும் அவர் அங்கிருந்து பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். அந்த இடமே பண்டரிபுரம் என்னும் புண்ணியத் தலமாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

இவ்விதம் அற்பனாக இருந்த புண்டரீகன் மகோன்னத நிலையைப் பெற, அவன் பெற்றோர்களிடம் கொண்ட பக்தியே காரணமாக அமைந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/parable/p2152.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License