கடவுள் மனிதனைப் படைத்ததும் அவனுக்கு இரண்டு கூடைகளைக் கொடுத்தார்.
ஒன்றைப் பிறர் தவறுகளுக்கும், மற்றொன்றை அவனது தவறுகளுக்கும் வைத்துக் கொள்ளுமாறு கூறினார்.
அந்தக் கூடைகளை மனிதனின் கழுத்தில் போட்டபோது, பிறர் தவறுகளைச் சேகரிக்கும் கூடை முன்பக்கமாகவும், தன் தவறுக் கூடை பின்பக்கமாகவும் விழுந்தன.
ஆகவே, பிறர் தவறுக்கூடையே மனிதனின் பார்வையில் எப்போதும் இருந்து வருகிறது. தான் செய்த தவறுகளைப் பார்க்க வேண்டுமென்றால் சிரமப்பட்டுப் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டும்.
ஆனால், பிறரிடம் குற்றம் கண்டுபிடிப்பதும், அதை மறவாமல் இருப்பதும் எப்போதும் எளிது என்கிறது ஈசாப் குட்டிக்கதை.