எம்பார் என்ற ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர் தமது குருவாகிய திருமலை நம்பிகளுக்குப் படுக்கை போட்டுவிட்டு, உடனே அந்தப் படுக்கையில் ஒரு தடவை புரண்டு எழுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவரது செயலைக் கண்டு ராமானுஜர் கலங்கினார்.
தாம் கண்டதை ராமானுஜர் நம்பிகளிடம் விண்ணப்பித்தார்.
நம்பிகள், ''என் படுக்கையில் நீ தினமும் புரண்டு எழுந்திருப்பது மகா அபசாரமாகும். இதன் பலனை நீ அறிந்தாயா?'' என்று எம்பாரிடம் வினவினார்.
அதற்கு, “இந்த அபச்சாரத்திற்கு எனக்கு நரகம்தான் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், ஆச்சார்யரின் திருமேனியில் நோவு உண்டாகக் கூடாது என்பதற்காக அவ்விதம் சோதித்துப் பார்த்துச் சரியானபடி படுக்கையை ஏற்பாடு செய்கிறேன்'' என்றார் எம்பார்.
அதைக் கேட்டு எம்பாருடைய குருபக்தியை ராமானுஜரும் திருமலை நம்பியும் மிகவும் புகழ்ந்தார்கள்.