இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

பயனில்லாமல் போன வரம்

ஒரு பெரிய மனிதர் இருந்தார். வசதியில்தான் பெரியவர், குணத்தில் அல்ல.

கஞ்சனான அவர் அடுத்தவர்கள் நன்றாக இருந்தால் தாங்கிக் கொள்ள முடியாமல் பொறாமைப்படுவார்.

அவரது வீட்டின் எதிரில் ஏழை ஒருவர் இருந்தார். நல்லவரான அவர் அடுத்தவர் துன்பம் கண்டு சகிக்க மாட்டார். எல்லோருக்கும் உதவி செய்பவர்.

ஒரு நாள் சந்நியாசி ஒருவர் அந்த ஊருக்கு வந்தார். அந்தப் பெரிய மனிதரின் வீட்டுக் கதவைத் தட்டினார். சத்தம் கேட்டும் உள்ளே இருந்தவர் கதவைத் திறக்கவில்லை.

‘கதவைத் திறந்தால் யாராவது எதையாவது கேட்பார்கள். கொடுக்க வேண்டியிருக்கும்’ என நினைத்து மௌனமாகவே இருந்துவிட்டார்.

சந்நியாசி சிறிது தாமதித்தார். கதவு திறக்கப்படவில்லை என்றதும் எதிர் வீட்டிற்குச் சென்றார். அது அந்த ஏழையின் வீடு.

அந்த ஏழையும் அவரது மனைவியும் சந்நியாசியை மகிழ்ச்சியுடன் வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று அமரும்படி வேண்டினார்கள்.

இரவுச் சாப்பாடு முடிந்து விட்டிருந்ததால் அவருக்காக மீண்டும் புதிதாகச் சமைத்துப் பரிமாறினார்கள்.

திருப்தியாக உண்டபின் புறப்படும் சமயத்தில் சந்நியாசி அவர்களிடம், “எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. உங்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். ஏதாவது மூன்று வரம் கேளுங்கள்" என்றார்.

அதற்கு அந்த ஏழையும் அவரது மனைவியும், “உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி சுவாமி. எங்களுக்கு வரம் எதுவும் தேவையில்லை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறோம்" என்றனர்.

‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதை அவர்கள் புரிந்து கொண்டதை நினைத்து சந்நியாசி மகிழ்ந்தார். அவர் புறப்படும்போது அவர்களை ஆசீர்வதித்தார். உடனே அந்த ஏழையின் குடிசை ஒரு மாளிகையாக மாறியது. எல்லா வசதியும் வந்துவிட்டன.


மறுநாள் காலையில் அந்தப் பெரிய மனிதர் தம் வீட்டுக் கதவைத் திறந்தார். ஒரே ஆச்சரியம். ‘எதிரில் வழக்கமாகப் பார்க்கக்கூடிய குடிசை மாளிகையாக மாறியிருந்தது. இதற்கு என்ன காரணம்?’ என்று விசாரித்தார். விவரம் அறிந்தார்.

உடனே ஆசை மிகுதியுடன் காரை எடுத்துக் கொண்டு அந்த சந்நியாசியைத் தேடிக் கிளம்பினார்.

ஒரு காட்டுக்குள் அந்த சந்நியாசி அமர்ந்திருந்தார். அவர் காலில் விழுந்து, “என்னை மன்னியுங்கள் சாமி. ஏதோ தெரியாத்தனமாக உங்களிடம் தவறுதலாக நடந்து கொண்டேன்" என்றார்.

“இப்போது உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார் சந்நியாசி.

“வேறு ஒன்றும் வேண்டாம். அந்த ஏழைக்குக் கொடுப்பதாகக் கூறிய அந்த மூன்று வரங்களை மட்டும் எனக்குக் கொடுத்தால் போதும்" என்றார்.

“சரி, கொடுக்கிறேன். ஆனால் ஒன்று. உனக்கு என்ன வேண்டும் என்று நீ முதல் மூன்று முறை எதை நினைக்கிறாயோ அது அப்போதே கிடைக்கும்!" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் சந்நியாசி.

வரத்தை வாங்கிக் கொண்டு அந்தப் பெரிய மனிதர் காரில் உற்சாகமாகப் புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் கார் சகதியிலே சிக்கிக் கொண்டது. அவருக்கு எரிச்சலாகிவிட்டது.

‘நமக்கு வரம் கிடைத்த விவரத்தைச் சீக்கிரமாகப் போய் ஊர் முழுக்கச் சொல்லலாம் என்று நினைத்தால் இடையில் இந்த கார் இப்படி ஆகிவிட்டதே. இந்த கார் இருந்தாலும் ஒன்றுதான்; எரிந்து போனாலும் ஒன்றுதான்’ என்று நினைத்ததும் முதல் வரம் வேலை செய்தது. கார் உடனே தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிப் போனது. முதல் வரம் தீர்ந்தது.

‘சரி, பரவாயில்லை. இன்னும் இரண்டு வரங்கள் பாக்கி இருக்கின்றன. பார்த்துக் கொள்ளலாம்’ என்று எண்ணி நடந்தே புறப்பட்டார்.

உச்சி வெயில். வேர்க்க விறுவிறுக்க நடந்து வந்து கொண்டிருந்தார். தாகம் எடுத்தது. நீர் கிடைக்கவில்லை. அப்போது அவர், ‘நான் இப்படி வெயிலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் மனைவி வீட்டில் ஏ.சி அறையில் ஆனந்தமாக இருக்கிறாள். அவளுக்கு எங்கே என் கஷ்டம் புரியப் போகிறது? அந்த வீடு பற்றி எரிந்தால்தான் அவளுக்குப் புரியும்’ என நினைத்தார்.


அவ்வளவுதான், இரண்டாவது வரமும் வேலை செய்தது. அவருடைய பங்களா தீப்பற்றி எரிந்தது. அவரது மனைவிக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டதைக் கண்டு துடிதுடித்துத் தலையில் அடித்துக் கொண்டார்.

‘இப்படிப்பட்ட கொடுமையைப் பார்ப்பதற்காகவா கடவுள் எனக்குக் கண்களைக் கொடுத்தார். இந்தக் கண்கள் இருந்து என்ன பயன்?’ என்று நினைத்தார். இப்போது மூன்றாவது வரமும் தீர்ந்துவிட்டது.

அந்தோ, அவரது பார்வை பறிபோனது.

இங்கு ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? வரம் வாங்கியும் அந்த மனிதருக்கு அது நல்ல விதமாகப் பயன்படவில்லை. அதற்குப் பொறாமை, சுயநலம், முன்கோபம் இவைதாம் காரணம். இந்த மூன்றும் இருந்தால் மற்றவர்கள் நமக்கு நன்மை செய்தாலும், அது நல்ல விதமாக நமக்குப் பயன்படாது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/parable/p2178.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License