இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

சிறுவனின் தவத்திற்கு இரங்கிய சிவபெருமான்

உபமன்யு என்ற சிறுவன் வீட்டிற்குள் ஓடிவந்து தன் அன்னையின் மடியில் உட்கார்ந்தான். அவன் தன் தாயைப் பார்த்து, “அம்மா! எனக்கும் அவ்வளவு பால் வேண்டும். அதே போல் இனிப்பாக இருக்க வேண்டும்!" என்று கெஞ்சினான். உபமன்யு சற்று நேரத்திற்கு முன்பு தன்னுடைய மாமாவின் வீட்டிற்குச் சென்றிருந்தான். அங்கு அவனுடைய மாமாவின் மகன் பால் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அதோடு அவனுக்கும் அங்கு ஒரு வாய் பால் கிடைத்தது. உடனே வீட்டிற்கு ஓடிவந்து தன் தாயிடம் பால் வேண்டும் என்று கேட்டான்.

உபமன்யு பால் கேட்டவுடனே அவனது தாயின் உள்ளம் தாங்கொணாத வேதனைப்பட்டது. அதற்குக் காரணம் அந்த வீட்டில் நிலவிய வறுமைதான். வீட்டில் சாப்பிடக்கூடப் போதுமான உணவுப் பண்டங்கள் இல்லை. அப்படி இருக்கும்போது அவள் பாலுக்கு எங்கே போவாள்? உபமன்யுவை எடுத்து மடி மீது அமர்த்திக் கொண்டு தன் வேதனையை மறைத்தபடி அவள், "குழந்தாய்! நாமோ ஏழைகள். நமக்கு அன்றாடம் பசி நீங்குமளவிற்கு உணவு கிடைப்பதே அரிதாக இருக்கிறதே! இந்த நிலையில் நான் பாலுக்கு எங்கே போவேன்? நீ இதுபோல் பிடிவாதம் பிடிக்கக் கூடாது” என்று சொல்லிச் சமாதானப்படுத்தினாள்.

ஆனால், அடம் பிடிக்கும் குழந்தைகளைச் சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிதல்லவே! உபமன்யு தன் பிடிவாதத்தைச் சிறிதும் தளர்த்தாமல் பால் வேண்டுமென்று அழத் தொடங்கினான்.

அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. அன்றைய பகல் பொழுதிற்காகச் சிறிது சாதம் வாங்கி அவள் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்திருந்தாள். உடனே அந்தச் சாதத்தில் நீரை ஊற்றி நன்றாகப் பிசைந்து அதை ஒரு டம்ளரில் ஊற்றி அவள், "குழந்தாய்! இந்தா பால், இதைக் குடி. நீ மிகவும் சமர்த்தல்லவா? அழக்கூடாது'' என்றாள்.

ஆவலுடன் கையை நீட்டி உபமன்யு டம்ளரை வாங்கிக்கொண்டான். உதட்டில் அதை வைத்தவுடனே அது பால் அல்ல என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. டம்ளரைத் தாயிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, "அம்மா! இது அசல் பால் அல்ல; போலிப் பால்! அசல் பால் மிகவும் இனிமையாக இருக்கும். இது எனக்கு வேண்டவே வேண்டாம்!” என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் அழ ஆரம்பித்தான்.

உபமன்யுவின் தாய் மகனின் நிலை கண்டு மிகவும் கலங்கினாள். பிறகு அவனைப் பார்த்து, ''குழந்தாய்! இந்த உலகில் முத்து, வைரம், மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த பொருள்கள் அநேகம் இருக்கின்றன. ஆனால் அவை நமக்கு நல்ல அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும். நாமோ அபாக்கியசாலிகள். நம்மைத் துரதிர்ஷ்டம் பிடித்து ஆட்டுகிறது. எனவே நமக்கு நல்ல பால் கூடக் கிடைக்காது! சிவபெருமான்தான் சர்வ வல்லமை படைத்தவர். அவரைத் திருப்திப்படுத்தினால் பாற்கடலேகூட நம் அருகில் ஓடக்கூடும். சிவபெருமான் மகிழ்ந்தால் பக்தர்கள் எதைக் கேட்டாலும் அவர் தரத் தயங்கமாட்டார். அவரைச் சரணடைந்தால் நமது எல்லா விருப்பங்களும் நிறைவேறிவிடும். சிறந்த தவத்தினால்தான் அவரைத் திருப்திப்படுத்த முடியும்'' என்று உபதேசம் செய்தாள்.

தாய் சொன்னதை உபமன்யு மிகுந்த ஆர்வத்தோடு கேட்டான். அவனுடைய கண்ணிலிருந்து நீர் கூடச் சொட்ட மறந்துவிட்டது. தாய் கூறிய கருத்தை அவன் உணர்ந்து கொண்டான்.

அவனுடைய கண்களில் அசாதாரணமான ஒளி தென்பட்டது, மனதில் உறுதி உண்டாயிற்று. தாயின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். “அம்மா! நான் கண்டிப்பாகத் தவம் செய்யப் போகிறேன்! என் கடுமையான தவத்தால் சிவபெருமானின் இருப்பிடமாகிய கைலாசத்தையே ஆட்டி வைக்கப்போகிறேன். அவர் கண்டிப்பாக மகிழ்ந்து அந்தப் பாற்கடலையே எனக்காகக் கொடுக்கப் போகிறார்” என்று சொல்லிவிட்டு, ஒரு விநாடியும் தாமதிக்காமல் உபமன்யு வீட்டைவிட்டு வெளியேறினான்.

உபமன்யு இமயமலையின் மேல் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தவம் செய்ய அமர்ந்துவிட்டான். சிவபெருமானை மகிழ்விப்பதற்காக உணவு, தண்ணீர், உறக்கம் அனைத்தையும் துறந்து விட்டான். அவனுடைய கடுமையான தவத்தால் அகில உலகமும் நடுங்கத்தொடங்கியது. பகவான் விஷ்ணு, மற்றத் தேவர்களுடன் மந்தராசல மலைக்கு வந்து சிவபெருமானைக் கண்டு வணங்கி, "பிரபோ! சிறுவனின் தவத்தைக் கலைத்து அகில உலகத்தையும் காப்பாற்றுங்கள்'' என்று வேண்டினார்.

உபமன்யுவின் எதிரே ஐராவதம் வந்து நின்றது. அதிலிருந்து தேவேந்திரன் இறங்கினான். உபமன்யுவின் அருகே சென்று அவன் தவத்தைக் கலைத்துத் தேவேந்திரன், "குழந்தாய்! நான்தான் தேவேந்திரன். உன் தவத்தால் மிகவும் மகிழ்ந்தேன். குழந்தாய்! உன்னைப் போன்ற பச்சிளம் பாலகர்களுக்கு இவ்வளவு கடுமையான தவம் எதற்கு?" என்று கேட்டான்,

உபமன்யு தேவேந்திரனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தான். "சுவாமி! தங்களின் வருகையால் எனது இந்தக் குடிசை மிகவும் புனிதமடைந்து விட்டது. எனக்கு எப்போதும் சிவபெருமானின் திருவடிகளில் நிலையான பக்தி இருக்கும்படி அருள் புரிய வேண்டும்” என்று வேண்டினான். தன்னால் இயன்ற அளவுக்கு இந்திரனுக்கு விருந்துபசாரம் செய்தான்.

இத்திரன் சிறுவனை அருகே அழைத்து, “குழந்தாய்! சிவபெருமானை அடைவது மிகவும் கடினமான காரியம். ஆனால் நானோ மூவுலகிற்கும் தலைவன். எனவே நீ என்னை வணங்கினால் உனக்கு எல்லாவிதமான செல்வத்தையும் வற்றாது வழங்குவேன்!” என்று கூறிச் சிறுவனைச் சோதித்துப் பார்த்தான்.

உபமன்யுவுக்கு வந்ததே கோபம். அவன் உடனே தேவேந்திரனிடம், “நீ இந்திரனாக இருந்தால் இவ்விதம் சிவநிந்தனை செய்ய மாட்டாய். எனவே நீ தேவேந்திரன் வடிவத்தில் வந்திருக்கும் அரக்கனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீ என் தவத்தைக் கலைக்கவே வந்திருக்கிறாய். மேலும் நீ சிவபெருமானையே நிந்திக்கிறாய்! என் இஷ்ட தெய்வத்தை நிந்திக்கும் உன்னைக் கொன்றால் தான் என்ன!” என்று சொல்லிக் கொண்டே தேவேந்திரனைக் கொல்வதற்காக அருகில் வந்த உபமன்யு டக்கென்று நின்று விட்டான்! காரணம், இந்திரன் வடிவத்தில் வந்திருந்த சிவபெருமான் அவனுக்குக் காட்சி கொடுத்ததுதான்.

சிவபெருமான் உபமன்யுவிடம், "குழந்தாய்! உன் கடுமையான தவத்தின் பயனாக என்மீது இடையறாத பக்தியை நீ பெற்றுவிட்டாய். நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறி, உபமன்யுவைத் தழுவிக்கொண்டார். உபமன்யு சிவபெருமானின் திருவடிகளில் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்துவிட்டான்.

“நான் உன்னைச் சோதிப்பதற்காகவே அவ்விதம் செய்தேன்” என்று சொல்லிவிட்டுச் சிவபெருமான் உபமன்யுவின் விருப்பப்படியே பாற்கடலைப் பாயும்படி அருள்புரிந்தார். உபமன்யுவைத் தூக்கி அவர் உமாதேவியின் மடிமீது அமர்த்தி, ''ஜகஜ்ஜனனியாகிய அம்பாள் தான் உன் தாயார், நான் தான் உனக்குத் தந்தை' என்று கூறியருளினார்.

பகவதியான பார்வதிதேவி, குழந்தை உபமன்யுவிற்குப் பலவகையான செல்வங்களையும் யோகங்களையும் பிரம்மவித்தையையும் அருளினாள். உபமன்யு தன் நிலை மறந்தான். பரவசம் பொங்க, நடுங்கும் குரலுடன், அகில உலகையும் காக்கும் உமாதேவியையும் சங்கர பகவானையும் துதிக்கத் தொடங்கினான். பக்தன் கண்ணை மூடிக்கொண்டு பரவச நிலையில் இருந்த சமயத்திலேயே சங்கரர் கிரிஜாதேவியுடன் அங்கிருந்து மறைத்து உபமன்யுவின் உள்ளத்தில் நிலையாகக் குடிபுகுந்தார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/parable/p2180.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License