இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

உயிர் காத்த பொன்மொழி

கிராதார்ஜுனீயம்’ என்பது ஒரு மகாகாவியம். இதை இயற்றிய பாரவி என்பவர் மகாகவியாக விளங்கினார்.

பாரவியின் மனைவியின் பெயர் ரசிகா. பாரவி திருமணமான புதிதில் தமது மாமனார் வீட்டில் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு பாரவிக்கும் மாமனாருக்கும் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அது காரணமாக, பாரவி தம் மனைவியோடு மாளவ தேசம் வந்து அங்கேயே வசிக்க ஆரம்பித்தார்.

வறுமையால் வாடிய நேரத்தில் பாரவியின் மனைவி ரசிகா தம் நகைகளை விற்று வாழ்க்கை நடத்த உதவினாள்.

ஒரு நாள் உணவிற்கே வழியில்லாமல் போயிற்று. பாரவி மிகுந்த தன்மானம் உடையவர். மேலும், அவர் பிறரைப் புகழ்ந்து பாடிப் பொருள் பெறுவதையும் விரும்பாதவர். எனவே அவர் அன்றையப் பொழுதைக் கழிக்க, தாம் அதுவரை இயற்றிய ‘கிராதார்ஜுனீயம்’ என்ற காவியத்தின் மூன்று சுலோகங்களை ரசிகாவிடம் கொடுத்து அவற்றை விற்றுப் பொருள் பெற்று வரும்படி கூறினார்.

ரசிகா அந்த நாட்டு அரசனிடம் பாதி சுலோகத்தைக் கொடுத்தாள்.

அரசன் அந்த சுலோகத்தில் காணப்பட்ட வாக்கியத்தைப் படித்தான். அதில், “நன்றாக யோசித்து முடிவு செய்யாமல் ஒரு காரியமும் செய்யக் கூடாது. நன்றாக யோசித்த பிறகே எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப் பெற்றிருந்தது.

இந்த நன்மொழி அரசனைப் பெரிதும் கவர்ந்தது. எனவே அவன் அந்த நன்மொழியை அரண்மனையின் எல்லாச் சுவர்களிலும் எழுதி மாட்டும்படி உத்தரவிட்டான்.

அரசனின் இந்தச் செயல் அமைச்சனுக்குப் பெரிதும் வியப்பை உண்டு பண்ணியது.

சில மாதங்கள் கடந்தன. அரசனுக்கு அடிவயிற்றில் ஒரு கட்டி உண்டாயிற்று. அது காரணமாக அரசன் பெரிதும் வருந்தினான்.

அரசனது கட்டியை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதற்காக வெளிநாட்டிலிருந்து சிறந்த வைத்தியர் ஒருவரை வரவழைத்தனர்.

அந்தச் சமயத்தில் அமைச்சனின் உள்ளத்தில் ஒரு தீய எண்ணம் உருவாயிற்று. அதாவது அரசனது நோயைப் புறக்காரணமாக வைத்துக் கொண்டு, அரசனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்ற அவன் முடிவு செய்தான்.

ஆதலால் இது விஷயமாக அமைச்சன் வெளிநாட்டு வைத்தியரைத் தனிமையில் சந்தித்துக் கலந்து பேசினான்.

“அரசனின் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டிய கத்தியை முன்னதாகப் பல முறை விஷத்தில் தோய்த்து வைத்துக்கொள். அந்தக் கத்தியைக் கொண்டு நீ அரசனுக்கு அறுவைச் சிகிச்கை செய்தால் அரசன் இறந்துபோவது நிச்சயம். மக்களும் அரசனின் மரணத்தைக் குறித்துச் சந்தேகப்படமாட்டார்கள். ஏனென்றால், அரசன் கட்டியின் உபாதையி னாலேயே இறந்து போனான் என்று மக்கள் நம்பிவிடுவார்கள்” என்று மருத்துவனிடம் கூறிய அமைச்சன், அரசனைக் கொல்வதற்குக் கைக்கூலியாக அந்த வெளிநாட்டு மருத்துவனுக்குத் தங்க நாணயங்கள் நிரம்பிய நான்கு பைகளைக் கொடுத்தான்.

அயல்நாட்டு வைத்தியன் பண ஆசை காரணமாக அமைச்சனின் சூழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டான்.

மறுநாள் அரசனுக்கு அறுவைச் சிகிச்சை செய்வது என்று நாள் குறித்திருந்தனர்.

அதன்படியே அரசனிடம் சென்ற மருத்துவன் அரசனின் கட்டியை அறுத்துச் சிகிச்சை செய்வதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்தான். பின்பு கட்டியை அறுக்கும் பொருட்டு, விஷம் தோய்ந்த கத்தியைக் கையில் எடுத்தான்.

அவன் அரசனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய ஆரம்பித்த போது அரண்மனைச் சுவரில் பெரிதாக எழுதப்பட்டிருந்த நன்மொழி அவனது கவனத்தைத் திருப்பியது.

அந்த வாக்கியத்தைப் படித்தது காரணமாக, ‘அரசனது கட்டியை விஷம் தோய்ந்த கத்தியால் அறுவைச் சிகிச்சை செய்தால், மன்னன் இறந்தவுடன் அவனது உடல் நீலநிறம் பெற்றுவிடும். இதனால் உண்மை வெளிப்பட்டு நானும் பெரும் தண்டனை அனுபவிக்க நேரிடும்’ என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது.

உடனே பயந்த நிலையில் அவன் தான் முதலில் கையில் எடுத்த விஷக் கத்தியை மறைத்துவிட்டு, வேறு நல்ல கத்தியைச் சிகிச்சை செய்வதற்கு எடுத்துக் கொண்டான். அவனது தடுமாற்றத்தையும் செயலையும் அரண்மனை வைத்தியர் கவனித்துவிட்டார்.

ஆதலால் அவர் வெளிநாட்டிலிருந்து வந்த அந்த மருத்துவனிடம், “கத்தியை மாற்றியதற்கு என்ன காரணம்?” என்று விசாரித்தார்.

அவரது கேள்விக்கு வெளிநாட்டு மருத்துவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் பதில் சொல்லாமல் தயங்கினான்.

அரசவை மருத்துவர் பதில் சொல்லும்படி அயல்நாட்டு மருத்துவனை மீண்டும் வினவினார்.

அவரது கேள்விக்குக் கைக்கூலி பெற்றிருந்த மருத்துவனால் எந்தவிதப் பதிலும் சொல்ல முடியவில்லை.

சந்தேகம் கொண்ட ராஜவைத்தியர் விஷக் கத்தியை எடுத்துப் பாலில் போட்டார். உடனே பால் கறுப்பாக மாறியது.

நடந்தவை அனைத்தையும் அரசன் கவனித்துக் கொண்டிருந்தான். பால் கறுப்பாக மாறியதும், வெளிநாட்டு மருத்துவன் விஷம் தோய்ந்த கத்தியுடன் வந்திருக்கிறான் என்ற உண்மை அரசனுக்குப் புரிந்துவிட்டது.

ஆதலால் அவன் வெளிநாட்டு மருத்துவனை உடனே கைது செய்யும்படி கட்டளை பிறப்பித்தான்.

அரசன் கட்டளையிட்ட மாத்திரத்திலேயே பயந்துபோன அயல்நாட்டு மருத்துவன் உண்மையை ஒன்று விடாமல் அரசனிடம் கூறிவிட்டான்.

அத்துடன் அவன் அமைச்சன் கைகூலியாகத் தன்னிடம் கொடுத்த தங்க நாணயங்கள் அடங்கிய நான்கு பைகளையும் அரசன் முன்னால் வைத்துத் தன்னைக் காப்பாற்றும்படி கதறினான்.

விவரம் தெரிய வந்ததும் மன்னன் தன் அமைச்சனையும் கைது செய்யும்படி உத்தரவிட்டான்.

இவ்விதம் பாரவி எழுதிய சுலோகத்திலிருந்த நன்மொழி அயல்நாட்டு மருத்துவனைத் தவறு செய்வதிலிருந்து பாதுகாத்தது.

இதற்குள் இரண்டு மூன்று தினங்களில் அரசனது கட்டி தானாகவே உடைந்துவிட்டது.

அரசன் தன் உயிரைக் காத்தது பாரவியின் பொன்மொழியே என்று மகிழ்ந்தான். அத்துடன் தனது நன்றியறிதலைத் தெரிவிக்கும் வகையில் அவன் மகாகவி பாரவிக்கு லட்சம் பொற்காசுகள் கொடுத்துப் பாராட்டினான்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பாரவியின் புகழ் எங்கும் பரவியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/parable/p2182.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License