மனதின் குரல் - 10
முனைவர் கு. சிதம்பரம்
நாடக மேடையில் பீமன் துரியோதனன் வேசம்
முடிந்தபிறகு நண்பர்கள் வேசம்!
*****
நமத்துப் போன பொரி விற்பனை
ஆவதில்லை தேர்தல் சந்தையில்.
*****
வாக்கு என்ற ஒன்று இல்லையெனில்
வாழ்க்கை இல்லை ஜனநாயகத்தில்!
*****
மழைக்கு மட்டுமல்ல சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து
மக்களைப் பாதுகாக்கவும்தான் குடை!
*****
தொண்டர்களை இழந்த கழகமும் விழுதுகளை
இழந்த ஆலமரமும் சாய்ந்து போகும்!
*****
ஒவ்வொரு புதிய சந்திப்பிலும் கவரிமான்கள்
எதிர்கொள்கின்றன புதியதோர் எதிரியை!
*****
எலி வளைகளை அடைக்காமல் நீர்
பாய்ச்சுவது விவசாயத்திற்கு அழகன்று!
*****
மக்கள் பணத்தைத் திண்போர் தன்னினத்தை
விழுங்கும் பாம்புக்கு ஒப்பாவர்!
*****
பணமும் அதிகாரமும் தொடர்ந்து ஒருசிலரிடமே
குவிய வழிவகுப்பதல்ல ஜனநாயகம்!
*****
மயிலின் அழகு தோகையில் இல்லை
அதன் நடனத்தில் உள்ளது!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.