யாருக்குக் கடவுள் இல்லை...!
உ. தாமரைச்செல்வி.

நாம் இழைக்கும் இன்னல்களையும், நாம் அனுபவிக்கும் இன்னல்களையும் ஒரே தாரசினால் நாம் நிறுப்பதில்லை.
- ஈசாப்

தீயவர்கள் அச்சத்தினால் தான் பணிவார்கள். நல்லவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அன்புக்கே உண்டு.
- அரிஸ்டாட்டில்

நல்லொழுக்கத்தை விட மேலான பொருள் எதையும் தந்தை மகனுக்குத் தர முடியாது.
- முகம்மது நபி

மனிதரின் இன்னலைக் கண்டு மனிதன் கண் கலங்காவிட்டாலும் இயற்கை அன்னை கண் கலங்குகிறான்.
- வேர்ட்ஸ்வொர்த்

உழைப்பு சன்மானம் பெறுவதற்கு என்று நினைத்தால், அந்த உழைப்பு கடினம் போலத் தோன்றும்.
- டால்ஸ்டாய்

மனிதன் குறையுடையவன் மட்டுமல்ல, குறை காண்பவனும் ஆவான். பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன்; தன் குறையைக் காண்பவன் முழு மனிதன்.
- சாக்ரடிஸ்

கல்வியே மனிதனை உருவாக்குகிறது; முழுமனிதனைத் தகுதியுடையவன் ஆக்குகிறது. எழுத்தே உறுதி வாய்ந்த நெறியான மனிதனை உருவாக்குகிறது.
- பேக்கன்

தன்னிடம் கடவுளைக் காணாதவர்களுக்குக் கடவுள் இல்லை.
– டால்ஸ்டாய்

சோம்பலும் சோர்வும் கொண்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, ஒரு நாளேனும் பெருமுயற்சியோடு வாழ்ந்திருத்தல் மேலானது.
- புத்தர்

மனிதனை எது அடிமையாக்குகிறதோ, அது அவன் தகுதியில் பாதியை அழித்துவிடுகிறது.
- போப்

மேன்மைக்கு முன்பு பணிவும், அழிவுக்கு முன்பு இறுமாப்பும் வருகின்றன.
- பைபிள்

ஒருவன் தனக்கு என்ன வேண்டுமென்று விரும்புகிறானோ, அதுவே தன் சகோதரனுக்கும் வேண்டுமென்று விரும்புகிறவன் தான் உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவன்.
- நபிகள் நாயகம்

அறிவு எப்போதும் பக்திக்குப் பின்னரே செல்ல வேண்டும். அதை முந்தவும் கூடாது; அழிக்கவும் கூடாது.
- தாமஸ் கெம்பிஸ்

பிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனிதகுணம். பிறர் துன்பத்தை நீக்குதல் தெய்வகுணம்.
- ஹோரெஸ்மான்

அறச் செயல்களுக்கு எப்பொழுதும் ஆண்டவனின் அருள் உண்டு.
- வில்லியம் காங்கிரீவ்

நல்லவன் என்ற பெயர், செல்வத்தைக் காட்டிலும் மேலானது.
– பர்கர்

மனிதர்கள் அற்ப விஷயங்களிலேயே இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.
- நெப்போலியன்

ஆண்டவன் இல்லை' என்ற படியிலிருந்து இறங்கி 'இறைவனைத் தவிர' என்ற படியை நோக்கி முன்னேறு.
- இக்பால்

நல்லவரோடு தோழமை கொள். அப்படிச் செய்தால் நீயும் அவர்களில் ஒருவனாகிவிடுவாய்.
- வால்ட்டேர்

பெருமைக்காரன் கடவுளை இழக்கிறான். பொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான். கோபக்காரனோ தன்னையே இழந்து விடுகிறான்.
- மாக்த்ஸ்ஸோ

ஓர் ஆடு சிக்கினால், ராஜதந்திரிகள் அதன் உரோமத்தை மட்டும் கத்தரித்துக் கொள்வர். ஆனால் அரசியல் வாதிகள் அதன் தோலை உரித்துவிடுவர்.
- ஆஸ்டின் ஓமோலே

நமக்கு என்ன வேண்டும் என்று தெரியாமலே அதை அடைவதற்குப் பேயாய் அலைவது தான் அதிருப்தி.
- ஹெரல்ட்

தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி நிலவும்.
- பெர்னாட்ஷா

வாழ்க்கை என்பது ஓர் அலை. அதன் வண்ணமும் நிறமும் மாறிக்கொண்டே இருக்கும்.
– டிஸ்ரேலி

கோழையாக இருப்பவன் தன்னுடைய மரணத்துக்கு முன்னால் பல முறை (பயத்தினால்) செத்துச் செத்துப் பிழைக்கிறான்.
- ஷேக்ஸ்பியர்

உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள் ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. நாம் ஈட்டிய பொருளில் எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
- தாகூர்

நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும், உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.
- காந்தியடிகள்

அதிகப் பணம் இல்லாதவன் ஏழையல்ல; அதிகப் பணத்திற்கு ஆசைப்படுபவனே ஏழை.
- தாமஸ்

புகழ்ச்சி என்பது வார்த்தைகளால் ஆனது; உண்மைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
– பிரௌன்

அதிர்ஷ்டம் பலருக்கு நிறையக் கொடுப்பதாக மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது யாருக்குமே அவர்கள் வேண்டிய அளவிற்குக் கொடுத்ததில்லை.
- ஹாரிங்டன்

தவறுகளுடன் இருப்பது தகாது; அதைவிடத் தகாதது தன்னிடம் இருக்கும் பல தவறுகளை உணராமல் இருப்பது.
– பாஸ்கல்

கர்வம் என்பது முட்டாள்களை விட்டு ஒருபோதும் எந்தச் சூழலிலும் நீங்கி இருக்காத கெட்ட குணம் ஆகும்.
- பைரன்

மனிதன் கடைத்தேறுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு வழி முக்கியமானது. அது தன்னைத் தானே சோதனை செய்து கொள்வதாகும்.
- கிருபானந்தவாரியார்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.