இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




Quotes
பொன்மொழிகள்

நாக்கு ஒன்று இருப்பது ஏன்?

உ. தாமரைச்செல்வி.

 காய்க்காக மரம் பூக்கிறது. காய் தோன்றியதும் பூ உதிர்கிறது. அது போல, ஞானத்திற்காக வினைசெய்தால் ஞானம் கிட்டியதும் வினை அழியும்.

- கபீர்

 நம்பிக்கை இழக்காதே. அவநம்பிக்கையானது அறிவு, ஒழுக்கம் ஆகியவைகளுக்கு வீழ்ச்சியாகும்.

- இக்பால்

 நீரால் நெருப்பையும், குடையால் சூரிய தாபத்தையும், கூர்மையான ஈட்டியால் பெரிய மதயானையையும், தடியால் பசு, கழுதை முதலியவைகளையும், மருந்தால் வியாதியையும், பலவித மந்திரங்களால் விஷத்தையும் அடக்கிவிடலாம். எல்லாவற்றுக்கும் சாஸ்திரத்தில் மருந்து (உபாயம்) சொல்லியிருக்க, மூர்க்கனுக்கு மாத்திரம் மருந்தில்லையே?

- பர்த்ருஹரி

 நாம் பணக்காரர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்க முள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

- பெர்னார்ட்ஷா

 ஒருவன் தன் ஆத்மாவைப் பறிகொடுத்துவிட்டு, உலகம் முழுவதையுமே லாபமாகப் பெற்றாலும் என்ன பயன்?

- ஆஸ்கார் ஒயில்டு

 அதிகமான சிரிப்பு, அறிவு சூன்யத்தையே காட்டும்.

- கோல்டுஸ்மித்

 ஜனங்களிடையே இரக்கமும் சகோதர அனுதாபமுமே மனித வாழ்வில் பெறுவதற்காக முயல வேண்டிய பேருணர்ச்சிகள்.

- மார்லி

 நல்லவர்களின் புத்திமதியைப் புறக்கணித்துத் துஷ்டர்களின் யோசனையைப் பின்பற்றுகிறவன் உயிரைக் காப்பாற்ற முடியாது. கண்டதைத் தின்னும் நோயாளியைப் போன்றவன் அவன்.

- பஞ்சதந்திரம்

 நல்ல நண்பருக்கு அடுத்த படியில் இடம் பெற்றிருப்பவை நல்ல நூல்களே.

- கோல்ட்டன்

 உலகத்தாருக்கு நீ அளிப்பது உன் நன்னடத்தை. உலகத்தாரிடமிருந்து நீ பெறுவது புகழ். இந்த உண்மையை நீ எப்போது உணருகிறாயோ அப்போதுதான் நீ வாழ ஆரம்பிக்கிறாய்.

- பி. டெய்லர்

 கோபம் எழும்போது, அதன் விளைவுகளை எண்ணிப் பார்,

- கன்பூஷியஸ்

 கர்வம் முதன்மையான பெரிய பிரபு; நரகத்தின் ஜனாதிபதி.

- டிபோ

 மதுபானப் பிரியருடனும், மிகுதியாக மாமிசத்தை உண்பவருடனும் தொடர்பு கொள்ளாதே.

- விவிலியம்

 இரத்தம் துணியிலே பட்டால் துணியில் கறை படிந்து விடுகிறது. இரத்தம் குடலில் பட்டால் (புலால் உண்டால்) அது உங்கள் இதயத்தை, சிந்தனையைக் கறைப்படுத்தி விடுகிறது.

- குருநானக்

 இறைவன் உங்கள் மீது அன்பைப் பொழிந்துள்ளார். எனவே எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருங்கள். சதையையும் இரத்தத்தையும் நீங்கள் பலியாகத் தருவதை இறைவன் விரும்பவில்லை. உங்களது இதயத் தூய்மையைத்தான் இறைவன் விரும்புகிறார்.

- இஸ்லாம்

 எந்த வகையிலும் புலால் உண்பது பெரிய தவறு. புலால் உண்ணாமை மிகவும் போற்றத் தக்கது.

- யம ஸ்மிருதி

 இறைச்சி உண்ணும் செயல் மிக மிகக் கொடுமையானது. மனிதன் தாவர உணவுக்கு மாறுகிறான் என்பது அறிவின் வளர்ச்சிக்கு முதற்படி ஆகும்.
- டால்ஸ்டாய்


 இரண்டுவிதச் சுதந்திரங்கள் இருக்கின்றன. ஒருவன் விரும்பியதைச் செய்ய அனுமதிக்கும் சுதந்திரம் ஒரு வகை; செய்ய வேண்டியவற்றைச் செய்ய அனுமதிக்கும் சுதந்திரம் இரண்டாவது வகை.

- சார்லஸ் கிங்ஸ்லி

 நிலையான மனதுடைய மனிதன் விதியை நம்புகிறான். ஊசலாடும் மனதை உடைய மனிதன் அதிருஷ்டத்தை நம்புகிறான்.

- பெஞ்சமின் டிஸ்ரேலி

 குருடன் வழியில் இருக்கும் வைக்கோல் துரும்பை மிதித்தாலும் பீதி கொள்ளுகிறான். அதுபோல மாயையால் கட்டுண்டவர்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கண்டு பயமடைகிறார்கள்.

- ஞானதரிசினி

 உன்னிடம் பொருள்கள் இல்லை. உனது இறைவனின் அருளை எதிர்பார்த்திருக்கிறாய், இந்தத் தருணத்தில் உன்னிடம் ஒருவர் ஏதேனும் கேட்கிறார். அந்த அன்பரை நீ புறக்கணிக்கும்படி நேரிட்டால் மிகவும் அன்பான வார்த்தைகளையே அவருக்குக் கூறிவிடு.

- குர்ஆன்

 துஷ்டர் எல்லோரையும் உயர்பதவியில் வைப்பவனும், தர்மத்துக்குக் கட்டுப்படாதவனும், தன் நடத்தை இவ்வளவு கேவலம் என்பதை முற்றிலும் மறந்தவனும், ஆனால் விதிவசத்தால் ஐசுவரியமடைந்தவனும், நற்குணங்களுக்கெல்லாம் விரோதியும் ஆகிய அற்பனுடைய நாட்டிலிருக்கும் எவன் தான் சுகமடைவான்?

- பர்த்ருஹரி

 எவன் தன் குடும்பத்தைத் தாங்காமலும், பகைவரை அழிக்காமலும், உள்ள பொருளைக் காப்பாற்றாமலும் இருக்கிறானோ அவனுக்கு உயிர் வாழ்க்கையால் ஆகும் பயன் யாது?

- சுக்கிர நீதி

 தன் நன்னடத்தையினால் தகப்பனைத் திருப்தி செய்பவனே புத்திரன். கணவனுடைய நன்மையையே விரும்புகிறவள் மனைவி. துன்பத்திலும் இன்பத்திலும் சமமாக நடப்பவனே மித்திரன். இந்த மூன்றும் இவ்வுலகில் புண்ணியவான்களுக்குத்தான் அமைகின்றன.

- பர்த்ருஹரி

 தனது உணவுக்காகக் கவலைப்படுவது லோகாயத சிந்தனை. அடுத்தவன் உணவுக்குக் கவலைப்படுவது ஆன்மிகச் சிந்தனை.

- மார்ட்டைன்

 விவேகம் எப்போதும் ஒரு வரப்பிரசாதம். கல்வியறிவு சில சமயம் சாபக்கேடு ஆகிவிடுவதுண்டு.

- ஜான்ஷெட்

 படிக்கத் தகுந்த புத்தகங்களைவிட படிக்கத்தகாத புத்தகங்களே ஏராளம்.

- ரவீந்திரநாத் தாகூர்

 மனதில் எழும் தீய எண்ணங்களை எல்லாம் அகற்றிவிட வேண்டும். ஒரு தீய எண்ணத்துக்கு இடம் தந்தால் உடனே கோட்டைத் துவாரத்து வழியாகப் பகைவருடைய படைகள் நுழைவது போல ஆயிரக்கணக்காக வந்து நுழைந்துவிடும்.

- ராஜாஜி

 கோபம் எழும்போது, அதன் விளைவுகளை எண்ணிப் பார்.

- கன்பூஷியஸ்

 மனிதனுக்கு உள்ள மாண்பை இயற்கையிலேயே அறிந்து நடப்பது தான் ஆண்மை.

- விவேகானந்தர்

 இயற்கை மனிதனுக்கு இரண்டு காதுகளும் இரண்டு கண்களும் கொடுத்திருக்கிறது. ஆனால் நாக்கு மட்டும் ஒன்றுதான். பேசுவதைக்காட்டிலும் பார்ப்பதும் கேட்பதும் தான் அதிகம் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

- சாக்ரட்டீஸ்

 உழைப்பு என்பது தெய்வ வழிபாட்டுக்குச் சமம், சிரிப்பே வாழ்க்கையின் ஜீவன்.

- வல்லபபாய் படேல்

 இறைவனை நான் நேசிப்பதற்குக் காரணம், கடவுளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் சுதந்திரம் அளித்திருப்பது தான்.

- ரவீந்திரநாத் தாகூர்


 இல்லறமோ துறவறமோ ஜனசமுதாயத்திற்கும் ஜீவராசிகளுக்கும் சேவை செய்வதாக இருக்க வேண்டும். இந்தப் பொது நல உணர்ச்சி இல்லாவிட்டால் எந்த அறமும் பயன்படாது.

- ரமண மகரிஷி

 நீ ஒருவரிடம் பொறாமை கொண்டு பேசாதே. கண்ணால் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. கேட்போர்க்கு இன்பம் உண்டாகும்படி இனிமையாகப் பேசு.

- ஔவையார்

 குற்றமற்றவரை, ஒன்றும் அறியாதவரை, நிராகரித்துக் கண்டிப்பது எவ்வளவு வெட்கக்கேடான காரியம்!

- சாக்ரட்டீஸ்

 நம்புங்கள்! அறமே ஆற்றல், அந்த நல்ல நம்பிக்கையில் நாம் அறிந்த கடமையைச் செய்வோமாக!

- ஆபிரகாம் லிங்கன்

 தமிழா! ஒருவேளைச் சோற்றை விட்டாலும் விடு; ஆனால் தினமும் தியானம் செய்வதை நிறுத்தாதே!

- மகாகவி பாரதியார்

 எவ்வாறு சூரியனின் இயல்பு பிரகாசமோ, தண்ணீரின் இயல்பு குளுமையோ, அக்கினியின் இயல்பு உஷ்ணமோ அவ்வாறே சச்சிதானந்தத் தன்மையும் நித்திய நிர்மலத் தன்மையும் ஆத்மாவின் இயல்பாகும்.

- ஆத்மபோதம்

 மெய்யடியார்களின் தொடர்பும் இறைவனைப்பற்றிய பேச்சும் ஆகிய இரண்டும் கிடைத்தற்கு அரியன; மனைவி மக்களும் செல்வச் செழிப்பும் பாவிகளுக்குக்கூடக் கிடைக்கின்றன.

- துளசிதாசர்

 கருமத்தில் கண்ணாக இருப்பதே பிரார்த்தனைதான். துயரடைந்தவர்களுக்குத் தொண்டு செய்வதிலேயே பிரார்த்தனை முழுமை அடைகிறது.

- காந்தியடிகள்

 போதனை, படிப்பு, தியானம் முதலிய எல்லாவற்றையும் விட, குருகிருபை மிகவும் அவசியம். அதனாலேயே சாட்சாத்காரம் சித்திக்கும். மற்றவை எல்லாம் ஒருவாறு உதவும், இரண்டாந்தரம், குருகிருபையே சாட்சாத்காரத்திற்கு உரிய நேரான முக்கிய வழியாகும்.

- ரமண மகரிஷி

 ஆத்மஞானமின்றி இந்த உலகில் மனிதன் எதைச் செய்தாலும், அது ஒன்றுக்கும் உதவாத மணல்வெளியை உழுது பயிர் செய்வது போல, முடிவில் பயனற்றதாகும்.

- சூர்ய கீதை

 ஒழுக்கம் கெட்டவர்களுக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் பழைய நல்ல பெயர் வருவதில்லை.

- எடிஸன்

 கடவுள் மனிதனை அளவெடுக்கும் போது தலையின் சுற்றளவைப் பார்ப்பதில்லை. இதயத்தின் அளவைத்தான் பார்க்கிறார்.

- வால் கோல்டு

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/quotes/p338.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License