சனீஸ்வர பகவானின் தாக்கத்தை குறைக்க சித்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் 20 எளிய பரிகார முறைகள் இவைதான்;
1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதத்தை வைக்கவும்.
2. சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.
3. கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
4. வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்குச் சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
5. சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது.
6. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
7. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும்.
8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
10. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யவும்.
11. கோ பூஜை (பசு வழிபாடு) செய்யவும்.
12. ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம், படிப்புச் செலவுக்கு உதவிகளைச் செய்யவும்.
13. சனிப் பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
14. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
15. சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்குச் சென்று வணங்கி வழிபாடுகளைச் செய்யவும்.
16. உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யவும்.
17. வன்னிமரத்தைச் சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
18. பிரதோசக் காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்கி வரவும்.
19. தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
20. சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு, காக்கைக்கு உணவு படைக்க தாக்கங்கள் குறையும்.