பிரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம், "ப்ரளீயந்தே அஸ்வின் தோஷா'' என்பதுதான். அதாவது, அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள். பகல் முழுவதும் மனிதர்கள் எவ்வளவோ செயல்களைச் செய்கிறார்கள். அவற்றில் நல்லவை, கெட்டவை கலந்தே இருக்கின்றன. அறியாமல் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதலும், நல்ல செயல்களுக்கு இறைவன் அருள் செய்தலும் இந்தப் பிரதோஷக் காலத்தில் தான். ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை நித்தியப் பிரதோஷம் (தினப் பிரதோசம்) எனவும், ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி “பட்சப் பிரதோஷம்” எனவும், சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால், அது “சனி_மஹா பிரதோஷம்” எனவும், திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் அது, “சோமப் பிரதோஷம்” எனவும் போற்றப்பட்டுச் சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படுகிறது.
பிரதோஷக் காலத்தில் நந்தியை வழிபடுவதால்,
1. செல்வங்கள் பெருகும்.
2. கடன் தொல்லைகள் நீங்கும்.
3. நோய்கள் அகலும்.
4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.
5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.
6. வேண்டிய வரம் கிட்டும்.
7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.
8. நீடித்த ஆயுள் கிட்டும்.
9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
என்று சொல்லப்படுகிறது.