தேவாரத் திருப்பதிகங்களில் காணப்படும் மொத்தப் பண்கள் 24. இப்பண்களைப் பாடும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு பகற்பண், இராப்பண் மற்றும் பொதுப் பண்கள் என்று 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
பகற்பண் , இராப்பண் , பொதுப் பண் ஆகும்.
பகற்பண் - 12
1. புறநீர்மை
2. காந்தாரம்
3. பியந்தைக் காந்தாரம்
4. கெளசிகம்
5. நட்ட பாடை
6. நட்ட ராகம்
7. பழம்பஞ்சுரம்
8. இந்தளம்
9. தக்கேசி
10. காந்தாரப் பஞ்சமம்
11. பஞ்சமம்
12. சாதாரி
இராப்பண் - 9
1. தக்க ராகம்
2. பழந்தக்கராகம்
3. சீகாமரம்
4. கொல்லி
5. கொல்லிக் கெளவாணம்
6. வியாழக் குறிஞ்சி
7. மேகராகக் குறிஞ்சி
8. அந்தாளிக் குறிஞ்சி
9. குறிஞ்சி
பொதுப் பண்கள் - 3
1. செவ்வழி
2. செந்துருத்தி
3. திருத்தாண்டகம்