திக்பாலகர்கள் என்பவர்கள் திசைகளை காப்பவர்கள் ஆவர். வடமொழியில் திக் என்றால் திசை என்று பொருள், பாலகர் என்றால் காப்பவர்கள் என்று பொருள். எனவே திசைகளைக் காப்பவர்கள், திக்பாலகர்கள் என அழைக்கப்பட்டனர். எட்டுத் திக்குகளை காப்பவர்களை மொத்தமாக அஷ்டதிக்பாலகர்கள் என அழைப்பர். எட்டுத் திக்குகளுடன் ஊர்த்துவம் (மேல்) மற்றும் அதம் (கீழ்) திக்குகளை காப்பவர்களையும் சேர்த்து தசதிக்பாலகர்கள் எனவும் அழைப்பதுண்டு.
இந்து மதத்தில், திக்பாலகர்களின உருவங்களை கோவில் கோபுரங்கள், வாயில்கள், கூரைகள் மற்றும் சுவர்களில் காணலாம்.
இங்கு திக்பாலகர்கள், அவர்களுக்கான திசை, மந்திரம், ஆயுதம், துணை, கிரகம் ஆகியவை தரப்பட்டிருக்கின்றன.
1. குபேரன் - வடக்குத் திசை - ஓம் ஷம் குபேராய நம - கதாயுதம் - குபேரஜாயை - சந்திரன்
2. யமன் - தெற்குத் திசை - ஓம் மம் யமாய நம - தண்டம் - வராகஜாயை - குரு
3. இந்திரன் - கிழக்குத் திசை - ஓம் லம் இந்திரயா நம: - வஜ்ஜிராயுதம் - சசி - சூரியன்
4. வருணன் - மேற்குத் திசை - ஓம் வம் வருணாய நம - பாசம் - வாருணஜாயை - சுக்கிரன்
5. ஈசானன் - வடகிழக்குத் திசை - ஓம் ஹம் ஈசானாய நம - திரிசூலம் - ஈசானயஜாயை - ராகு
6. அக்னி - தென்கிழக்குத் திசை - ஓம் ரம் அக்னயே நம - சக்தி - சுவாகா தேவி - செவ்வாய்
7. வாயு பகவான் - வடமேற்குத் திசை - ஓம் யம் வாயுவே நம - அங்குசம் - வாயுஜாயை - சனி
8. நிருதி - தென்மேற்குத் திசை - ஓம் க்ஷம் ராக்ஷசாய நம - கட்கம் (வாள்) - கட்கி - புதன்
9. பிரம்மன் - ஊர்த்துவம் - ஓம் ஹ்ரிம் பிரம்மணே நம - தாமரை மலர் - சரஸ்வதி - கேது
10. விஷ்ணு - அதம் - ஓம் நமோ நாரயாணாயா - சக்கரம் - லக்ஷ்மி - லக்னம்