கிருட்டிணரின் குழந்தைப் பருவத்தைக் கொண்டாடும் ஒரு பாரம்பரிய மண் திருவிழாவாக, சிக்கல் கலோ இருக்கிறது. இந்திய மாநிலமான கோவாவின் வடக்குக் கோவா மாவட்டத்தில் உள்ள போண்டா தாலுகாவின் மார்செலில் உள்ள தேவகி கிருட்டிணா கோவிலில் நடைபெறுகிறது.
சிக்கல் கலோ என்ற சொற்களின் பொருள் "சேற்றுக் குளியல்" என்பதாகும். இந்தக் கொண்டாட்டம் கோவாவின் விவசாயச் சமூகத்திற்கும், தாய் பூமிக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆழமான பிணைப்பைக் கொண்டாடுகிறது.
இந்த விழாவில், மக்கள் உடலில் எண்ணெய் தடவி, கிருட்டிணர் குழந்தையாக இருந்த போது விளையாடிய விளையாட்டுகளைப் போலவே சேற்றில் விளையாடுவார்கள். இந்த விழாவில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்கின்றனர் .சிக்கல் கலோ விழா கோவா மாநில சுற்றுலாத் துறையால் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டுள்ளது.