பஞ்ச மகா யக்ஞங்கள் நாள்தோறும் செய்ய விதிக்கப்பட்டவை. இவை மனிதன் அறியாமல் செய்யும் பாவங்களை நீக்கும்.
1. தேவயக்ஞம்
பிரார்த்தனையும் வழிபாடும் செய்வது. இதனால் ஒளி, மழை முதலிய பலன்களைப் பெறலாம்.
(தெய்வத்திற்குப் பத்திரம் (துளசி), புஷ்பம், நீர், இவற்றால் ஆராதனை செய்து பழம் போன்றவற்றால் நிவேதனம் செய்யாமல் உண்கிறவன் திருடனுக்குச் சமானம் - கீதை 3-129-26.)
2. ப்ரம்ம யக்ஞம் அல்லது ரிஷியக்ஞம்
ரிஷிகள் மூலம் வந்த வேதங்களைக் கற்பது, கற்பிப்பது; காலை, மாலை, மதியம் ரிஷிகளின் மந்திரங்களைக் கூறிக் கடவுள் வந்தனம் செய்வது.
3. பிதிர் யக்ஞம்
நமக்கு நன்மை செய்ய விரும்பும் பிதிரர்களுக்கு நீர்விட்டு நமது நன்றியைக் காட்டல். மாதா பிதாவிடம் காட்ட வேண்டிய பக்தியும் கடமையும் இதில் அடங்கும்.
4. ந்ருயக்ஞம் அல்லது மானுஷயக்ஞம்
அதிதிகளை உபசரித்தலும், ஏழைகளுக்கு அன்னமிடலும்.
5. பூதயக்ஞம்
விலங்குகளைக் காப்பாற்றுதலும், உணவில் ஒரு பகுதியைப் பறவை பிராணிகளுக்கு அளித்தலும்.