ஆத்ம பஞ்சகம்
மு. சு. முத்துக்கமலம்
ஆதிசங்கரர் அருளிய ஆத்ம பஞ்சகம் தெரிவிப்பது இதுதான்.
* நான் உடலல்ல; உணர்வுகளல்ல; உள்ளமுமல்ல. நான் என்ற அகந்தையோ அல்லது புத்தியோ அல்ல. மனைவி, மக்கள், நிலம், ஐசுவரியம் ஆகிய எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான். முடிவில்லாதவற்றுக்கும், அந்தராத்மாவுக்கும் சாட்சியாகிய நானே சிவமாகும்.
* அறியாமையினால் பழுதை பார்வைக்குப் பாம்பாகக் காணப்படுவதுபோல் ஒருவனது அறியாமையினால் அவனது உயிரின் அமைப்பே ஆத்மாவாகத் தோன்றுகிறது. ஒருவன் யாரொருவரிடம் நம்பிக்கை வைத்துள்ளானோ அவர் அவனிடம் விளக்கிச் சொல்லப்படும் போது மாயை மறைகிறது. அவன் பழுதையைப் பார்க்கிறான். அவ்வாறே குருவின் உபதேசத்தால், 'நான் தனித்தன்மை வாய்ந்த ஆத்மாவல்ல, நானே சிவம்' என்பதை உணர்கிறேன்.
* தான் என்ற உண்மை, அறிவு, பேரின்பம் இவையாவும் இந்த உலகத்தில் அறியாமை காரணமாகப் பொய்யாகப் பிரகாசிக்கின்றன. அவை உண்மையல்ல. ஆழ்ந்த உறக்கத்தின் தூண்டுதலில் கனவுகள் தோன்றுவது போல் பரிசுத்தமான வரையறையற்ற ஒன்றாகிய நானே சிவமாகும்.
* இங்கே என்னைத் தவிர வேறொன்றுமேயில்லை. வெளியுலகம் மாயையின் தோற்றமேயாகும். ’நான் இரண்டு அல்ல, ஒன்றே' என்ற எண்ணம், கண்ணாடியில் பிரதி பிம்பம் தோன்றுவது போல், என்னுள்ளே பிரகாசிக்கிறது. எனவே நானே சிவமாகும்.
* நான் பிறக்கவில்லை, வளரவில்லை, இறப்பதுமில்லை. பிரகிருதியால் பேசப்படும் குணங்கள் அனைத்தும் உடலால் பேசப்படுவதாகும். பிரதிநிதித்துவம் போன்றவை நானென்ற அகந்தையேயாகும். நான் பரிசுத்தமாகிய அறிவாகிய ஆத்மாவல்ல; நானே சிவமாகும்.
* நான் பிறக்கவில்லை. எனக்கு எப்படிப் பிறப்போ இறப்போ இருக்க முடியும்? நான் மூச்சல்ல. நான் எப்படிப் பசியால் வாடவோ தாகத்தால் தவிக்கவோ முடியும்? நான் உள்ளமல்ல. எனக்கு எப்படி வறுமையோ ஏமாற்றமோ இருக்க முடியும்? நான் கர்த்தாவுமல்ல. எனவே எனக்குப் பந்தமும் இல்லை; மோட்சமும் இல்லை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.