இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

சுவாமி ஐயப்பன் தத்துவ விளக்கம்

மு. சு. முத்துக்கமலம்

தர்ம சாஸ்தா தேகத்தை வெல்லும் யோகிகளுக்கு உபாசனா மூர்த்தியாகவும், யோக ஐயப்பனாகவும் விளங்குகிறார். சபரிமலை யாத்திரை என்பது ஆன்மிக யாத்திரையேயாகும்.

எல்லாத் தர்மங்களையும் விட்டு என்னையே சரணடை. நான் எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை விடுவிக்கிறேன் என்று பகவான் கீதையில் கூறுகிறார். ஆனால், அதே பகவான் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகச் சிவனுடைய அம்சத்துடன் சேர்ந்து தர்ம சாஸ்தாவாக அவதரிக்கிறார். எல்லாத் தர்மத்தையும் விடும்படி கூறும் பகவான் பின் எந்தத் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக அவதாரம் செய்கிறார்?

மனிதனுக்கு உள்ளது ஒரே ஒரு தர்மம்தான். அது ஆத்ம சாட்சாத்காரம் பெறுவதேயாகும். இந்த ஆத்ம சாட்சாத்காரம் அடைவதற்குத்தான் பகவான் என்னையே சரணடை என்று கூறுகிறார். எனவே ஆத்ம சாட்சாத்காரம் என்ற ஒரே தர்மத்தை நிலைநிறுத்துபவனே தர்ம சாஸ்தா ஆகிறான்.

ஆர்யதாதன் என்பது ஐயப்பன் என மருவி வந்துள்ளது. ஆர்ய என்பதன் திரிபு ஐயன் எனப்படும். தாதன் என்ற சொல்லுக்கு அப்பன் என்று பொருள். எனவே ஐயப்பன் என வழங்கலாயிற்று. மேலும், ஐயன் என்பது திருமாலைக் குறிக்கும் சொல்; அப்பன் என்பது சிவனைக் குறிக்கும் சொல். இவை இரண்டும் சேர்ந்து ஐயப்பன் என வந்துள்ளது. சிவனுடைய ஞானம், தவம் ஆகியவை இணைந்த பிரம்ம அம்சமும், திருமாலுடைய பக்தி, பிரேமை, கிருபை ஆகியவை இணைந்த சேத்திர அம்சமும் இரண்டறக் கலந்த அவதார மூர்த்தியே ஐயப்பன்.

சிவ-விஷ்ணு அம்சம் என்பதைக் குறிக்கும் வகையில் ஐயப்பனுக்கு விஷ்ணுவின் சின்னமான நாமம் அணிவிக்கப்படுகிறது. சிவ சின்னமாக விபூதிப் பிரசாதம் தரப்படுகிறது.

‘அபிஷேகப் பிரியன் சிவன், அலங்காரப் பிரியன் விஷ்ணு’ என்பதற்கு இணங்க, அபிஷேகச் சிறப்போடு சர்வ அலங்கார பூஷிதனாக ஐயப்பன் காட்சி அளிக்கிறார்.

யோகப் பட்டம் இணைந்த முழங்காலுடன் வலக்கை சின்முத்திரையைக் காட்டியபடி, மற்றொரு கரம் திருவடியைக் காட்டும் கீழ் நோக்கிய நிலையிலும், யோகமூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

இந்தக் கோலத்திலும் சின்முத்திரை சிவ அம்சமும், அபயகரம் விஷ்ணுவின் அம்சமும் ஆகும்.

தேகத்தை வெல்லும் யோகிகளுக்கு உபாசனாமூர்த்தியாக இருந்து ஐயப்பன் உதவி புரிகிறார். பூரணை, புஷ்கலை என்பது ஐயப்பனின் இரு சக்திகளாகும். ஆன்ம சாதகன் உடற்பற்றை வென்று பிராணஜயம் பெற்றுத் தன்னைப் பிரம்மமாக உணரும்போது பரம யோகியான ஐயப்ப தரிசனம் கிடைக்கிறது.

மதங்கொண்ட யானை - இந்திரியங்கள். குதிரை - பிராணன். ஊர் - தேகம். குதிரை ஓட்டும் சவுக்கு - பிராணனைச் செலுத்தும் சவுக்கு. வெள்ளை யானை - பிரணவ தேகம். பூரணை - தோளுக்கு மேல் உள்ள சந்திர மண்ட லத்தில் அறிவாய் விளங்குபவன். புட்கலம் - தேகம். பொன்னம்பல மேடு - புருவநடு.

பிராணன் என்ற குதிரை மீதேறி, தேகமாகிய ஊரைப் பாதுகாப்பவன் ஐயனார். இவனே அக்கினி சொரூபமாய் ஒவ்வொருவரிடமும் உள்ளான். ஜோதிசொரூபமான் ஐயன், பிராணன் என்ற குதிரை மீது ஏறி மனதில் பொருந்தித் தேகத்தை நடத்துகிறார். இது ஸ்தூல நிலையில் இயங்கும் போது மனிதன் பந்தப் பாசங்களில் பொருந்திக் காரிருளில் அழுந்தி கிடக்கிறான். அதே ஐயன் யோக நிலையில் பிராணன் என்ற குதிரையில் தொண்டைக்கு மேல் ஏறிச் சிரசை நோக்கிச் சென்று, பிராண ஐயம் பெற்று, சூட்சும நிலையில் இயங்கும் போது புருவ நடுவில் ஒளியாகவும் நாதமாகவும் மாறிப் பிரம்மமயமாகிறான். இதனால் பரிசுத்தமடைந்த இந்திரியங்கள் வெள்ளையானை என்ற பிரணவ தேகத்தைப் பெறுகின்றன. இதை உணர்த்தும் வகையில் வெள்ளையானைமீது ஐயனார் ஆரோகணித்துச் செல்கிறார்.

எனவே ஆன்மசாதகன் உடலைக் கட்டி, மனதைக் கட்டி, கத்திமுனைப் பாதையில் நடப்பதைப் போல ஆன்மிக யாத்திரை மேற்கொண்டு பிரம்மத்தை அடைவதையே, சபரிமலை யாத்திரையில் ஐயப்பனை அடைவது காட்டுகிறது. அதற்காகத்தான் மண்டல பூஜை என்று நாற்பது நாள் விரதம் இருந்த பிறகு மலைக்குச் செல்கிறார்கள். இருமுடி கட்டுதல் என்பது சங்கல்பம், மனவுறுதி ஆகியவற்றைக் குறிக்கிறது. கறுப்புத் துணி அணிவது என்பது நாம் அஞ்ஞான நிலையில் இருப்பதைக் காட்டுவதாகும்.

ஐந்து இந்திரியங்கள் - அன்னமயகோசம். எட்டு ராகங்களும் மூன்று குணங்களும் - பிராணமய, மனோமயகோசங்கள். வித்யா, அவித்யா இவற்றைக் கடப்பது - விஞ்ஞானமய, காரணமய கோசத்தையும் கடப்பது. எனவே மனிதன் பதினெட்டுத் தத்துவங்களையும் கடந்தால் ஐயப்பனைச் சென்று அடையலாம் என்பதே பொருள்.

கிராமத்தைக் காக்கும் தெய்வமாக ஐயன் இருந்தும், கிராமங்களுக்கு வெளியில் ஐயனார் கோயில் அமைந்துள்ளதற்குக் காரணம் - உலகப் பற்றை விட்ட ஞானிகளுக்கு வேண்டும் போது உலகம் செயற்படுவதும், வேண்டாத போது உலகை மறந்து பிரம்மத்தில் நிலைத்திருப்பதும் ஆகிய நிலையைக் குறிப்பதாகும். எனவே, நமது உள்ளத்தில் உறையும் தர்ம சாஸ்தாவைச் சரணமடைந்து சபரிமலை யாத்திரை என்ற ஆன்மிக யாத்திரையை மேற்கொண்டால் ஐயப்ப தரிசனம் கிடைக்கும் என்பது உறுதி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/hindu/p1322.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License