இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

கும்பாபிஷேகம்

மு. சு. முத்துக்கமலம்

கோயில்களின் ராஜகோபுரங்கள், விமானங்கள், மண்டபங்கள், கர்ப்பக்கிருகங்கள், பிராகாரங்கள் போன்றவை அவ்வப்போது பழுது பார்த்துத் திருப்பணிகள் செய்யப்பட்டுக் கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதன் மூலம் ஆலயங்களில் மேலும் மேலும் தெய்விக ஆற்றல் அதிகரித்து அவை அருள் வழங்கும் கேந்திரங்களாகத் திகழ்ந்து வருகின்றன.

பொதுவாகப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. கும்பாபிஷேகம் சில காரணங்களின் அடிப்படையில், ஆவர்த்தம், அனாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் எனும் நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஓர் இடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துச் சிவலிங்கத்தையும், பரிவார தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகம் செய்யப்படுவதை ‘ஆவர்த்தம்’ என்று கூறுவர்.

நீண்ட காலமாகப் பூஜை சரிவரச் செய்யப்படாததனாலும், மந்திரக்குறைவு சிரத்தைக் குறைவு போன்றவற்றினாலும் சாந்நித்யம் குறைந்துள்ள கோயில்களையும், காடு படர்ந்தும் சிதைந்தும் மண் மூடியும் தீயினால் சேதமாகியும், பெருமழை புயல் பூகம்பம் இவற்றினால் இடிபாடுகள் ஏற்பட்டும் உள்ள பழைய கோயில்களையும் புதிதாக நிர்மாணம் செய்து அதே மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்வதை ‘அனாவர்த்தம்’ என்பர்.

நடைமுறையிலுள்ள ஆலயங்களில் காலப்போக்கில் ராஜகோபுரங்கள் முதலியவை பழுதுபட்டிருந்தால் அவற்றைப் புதுப்பித்து, அஷ்டபந்தனம் இல்லாமல் இருந்தால் அவற்றை மீண்டும் சாத்தி அந்த அந்த மூர்த்தியை அந்த அந்த மூலத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது ‘புனராவர்த்தம்’ என்று கூறப்படுகிறது.

கோயிலுக்குள் யாராவது இறந்து போனாலும், கோயில் உட்புறத்தில் விலங்குகள், தூய்மை இல்லாதவர்கள், சமய உண்மை அறியாத புறச் சமயத்தவர் உள்ளே நுழைய நேர்ந்தாலும் செய்யப்படும் பிராயச்சித்தத்தை, சம்ப்ரோக்ஷணம் அல்லது ‘அந்தரிதம்’ என்பர்.

மூல மூர்த்தியிடமிருந்து இறைவனது ஆற்றலைக் கும்பங்களில் ஆவாகனம் செய்து, யாகசாலையில் பூஜை ஹோமங்களின் மூலம் கும்பத்தில் ஆற்றலைச் சேமித்து, இறுதியில் கும்பாபிஷேகத்தால் மீண்டும் மூல மூர்த்தியினிடம் இறைவனது ஆற்றலைச் சேர்ப்பது மகா கும்பாபிஷேகம் எனப்படும்.

கும்பாபிஷேகக் கிரியைகள் அறுபத்து நான்கு அல்லது ஐம்பத்தாறு என்று சிவாகமங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றில் பூர்வாங்கக் கிரியையாக முதலில் செய்யப்படும் அனுக்ஞை முதல் கலாகர்ஷணம் வரையில் பன்னிரண்டு கிரியைகள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

இந்தச் சடங்குகள் யாவும் மந்திரம், கிரியை, பாவனை என்பவற்றில் அடங்கும். ஒவ்வொரு கிரியையையும் தத்துவக்கண் கொண்டு காண வேண்டும்.

விக்னேச்வரர் பூஜை

கும்பாபிஷேகக் கிரியைகள் தடையின்றி நடைபெறுவதற்கு விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது. இதற்கு விக்னேச்வர பூஜை என்று பெயர்.

அனுக்ஞை

கும்பாபிஷேகத்தை நடத்தும் தகுதி உடையவர் விதிப்படி சிவதீட்சை பெற்ற ஆசாரியராகவே இருக்க வேண்டும். அவரே கும்பாபிஷேகத்தை நடத்தத் தகுதியுள்ளவர் என்று அனைவராலும் அங்கீகரிக்கப் பெற்றது. பின்பு இறைவன் இறைவியிடம் அனுமதி பெற்று அவரை நியமனம் செய்வது அனுக்ஞையாகும்.

வாஸ்துசாந்தி

வாஸ்துபுருஷன் என்ற அசுரன் இறவாவரம் பெற்றவன். எங்கே யாகம் நடந்தாலும் அதைத் தடுப்பதே இவனது வேலை. எனவே யாகசாலையில் இவனது இடையூறு இல்லாமல் இருக்க இந்த அசுரனைக் காவல் காக்கும் ஐம்பத்துமூன்று தேவர்களையும், பிரம்மா முதலிய தேவர்களையும் பூஜை பலி முதலியவற்றால் திருப்தி செய்வது ‘வாஸ்துசாந்தி’ எனப்படும்.

மிருத் ஸங்கிரஹணம் (எண் எடுத்தல்)

அங்குரார்ப்பணம் என்ற கிரியை செய்வதற்காகப் பூமியை வெட்டி மண் எடுப்பார்கள். அப்போது பூமிக்கு அதிபதியான இந்திரனையும் காவல் தெய்வங்களான திக்பாலகர்களையும், பிரம்மாவையும் பிரார்த்தித்துப் பிறகு மண்ணை வெட்டி எடுப்பார்கள். இந்தக் கிரியை மிருத் ஸங்கிரஹணம் எனப்பெறுகிறது. இவ்வாறு மண் வெட்டும்போது ஏற்படும் தோஷம் நீங்க, ஏழு கடல்களை வரவழைத்துப் பூஜை செய்வதாகப் பாவித்து, வெட்டிய பள்ளத்தில் அபிஷேகம் செய்கிறார்கள். அதற்கு அடுத்ததாக அங்குரார்ப்பணம் என்ற கிரியை கும்பாபி ஷேகத்தில் இடம் பெறுகிறது.

காப்புக் கட்டுதல்

கிரியைகள் நடத்தும் ஆசாரியருக்கு எதிர்பாராத வகையில் இடையூறுகள் ஏற்படாமல் காக்கும் பொருட்டு அவரது கையில் மந்திரபூர்வமாகக் கயிறு கட்டுவது காப்புக் கட்டுதல் எனப்படும். இதனால் கிரியைகள் பூர்த்தியாகும் வரையில் ஆசாரியன் தீட்டு முதலிய தோஷங்கள் அணுகாமல் காக்கப்படுகிறான்.

கும்ப ஸ்தாபனம்

கும்பாபிஷேகம் ஆகும் வரையில் இறைவனைக் கும்பத்தில் (குடத்தில்) ஆவாகனம் செய்து அதை வித்யாதேகமாகப் பாவித்து வழிபடுவது கும்ப ஸ்தாபனம். கும்பத்தை எவ்வாறு உடலாகப் பாவிக்க வேண்டும் என்பதை யோகஜம் என்ற சிவாகமம் விளக்கமாகக் கூறுகிறது.

கும்பம் மாமிச சரீரமாகவும், குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகவும், கும்பத்தில் இடப்படும் நவரத்தினங்கள் சுக்லமாகவும் நவசக்திகளாகவும் கருதப்படுகின்றன. கும்பத்திலுள்ள தர்ப்பைக் கட்டு நாடியைக் குறிக்கும். குடத்தின் மேல் சுற்றப்பட்டுள்ள முப்புரி நூல் நரம்புகளாகும். கும்பத்தைச் சுற்றியுள்ள வஸ்திரம் தோலாகவும், உச்சரிக்கப்படும் மந்திரங்கள் பிராணனாகவும் கருத வேண்டும் என்று சைவாகமம் கூறுகிறது.

குடத்தின் மேல் உள்ள தேங்காய் முகம்; தேங்காயின் மேல் விரித்துள்ள லம்ப கூர்ச்சம் சிகை; மாவிலைகள் சிவபெருமானின் ஜடாபாரங்கள் என்று அங்க கற்பனை பற்றிச் சிவாகமம் கூறுகிறது.

கும்பம் என்பது, ஆறு அத்துவாக்களின் வடிவமாகும்.

கும்பத்தின் அடியில் ஆத்ம தத்துவங்களும், நடுவில் வித்யா தத்துவங் களும், முடியில் சிவதத்துவங்களும் உள்ளதாகப் பாவித்துப் பூஜிக்க வேண்டும். கும்பத்தில் காவிரி போன்ற சர்வ தீர்த்தங்களும், பஞ்சாவரண தேவதைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பூஜை செய்யப்படுகிறது.

கலாகர்ஷணம்

சிவலிங்கத்திலுள்ள பிரசாத கலைகளையும், ஆறு அத்துவாக்களையும் (மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை), ஆன்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் ஆகியவற்றையும் நியாசங்கள் மூலமாகவும், மூல மந்திர ஆவாகனங்கள் மூலமாகவும் கும்பத்தில் ஆகர்ஷணம் செய்து, குறிப்பிட்ட காலம் வரையில் கும்பத்திலேயே இருக்கச் செய்வதற்குக் கலாகர்ஷணம் என்று பெயர். அந்த மூர்த்தியை எந்த ரூபத்தில் ஆவாகனம் செய்கிறோமோ அந்த மூர்த்தியை அந்தக் குடத்தில் வழிபடுவதாக ஆகும்.

யாகபூஜை

இறைவனை முறைப்படி ஆவாகனம் செய்து, கும்பத்தை யாகசாலையில் வைத்து, ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற யாககுண்ட முறைப்படி ஒவ்வொரு காலமும் பூஜை செய்வது யாகபூஜையாகும்.

கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை மிகவும் முக்கியம். யாகசாலை மந்திரங்களாலும் தேவர்களாலும் புனிதமாக்கப்பட்ட இடமாகும். இங்கே சகள நிஷ்கள மூர்த்திகளாகச் சூரியனும் சிவபெருமானும் விளங்குகின்றனர். துவாரபாலகர்கள், மகாகாளன், நந்தி முதலிய திக் அதிபர்களும், லட்சுமி, விநாயகர், சப்த குரு முதலியவர்களும் நிறைந்துள்ள இடம் யாகசாலை. இத்தகைய யாகசாலையின் நடுவில் வேதிகை குண்டம் அமைக்கப்படுகிறது.

யாகசாலை ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது என்ற எண்ணிக்கையில் யாககுண்ட விதானமாக அமைக்கப்படும். அதைச் சுற்றிப் பதினாறு, இருபத்துநான்கு, முப்பத்திரண்டு பதங்களாகப் பல பதங்களை அமைப்பர். அதில் தீயை வளர்த்து இறைவனுக்குச் செலுத்தப்படும் சிறந்த பூஜைக்கு உரிய பொருள்களைக் தீயில் இடுவார்கள். இதுவே ஹவிஸ் என்று வழங்கப்படுகிறது. பாகனிடம் யானை கட்டுப்படுவது போல இங்கு இறைவன் ஆசாரியரிடத்தில் அன்பால் கட்டுப்படுகிறார்.

யாகசாலையில் அஷ்ட மூர்த்தி வழிபாடு நடைபெறுகிறது. வேதிகையாகிய மேடைகள் பிருத்வியாகிய நிலத் தத்துவத்தைக் குறிக்கும். கும்பங்களிலுள்ள புனித நீர் ஜலத் தத்துவத்தை உணர்த்துகிறது. ஹோம குண்டத்திலுள்ள நெருப்பு அக்கினி தத்துவத்தை விளக்குகிறது. இந்த அக்கினி சிவபெருமானாகவே கருதப்படுகிறது. மந்திர ஒலிகளும் வேத பாராயணங்களும் வாயு தத்துவமாகப் போற்றப் பெறுகின்றன. இடைவெளியான ஆகாயம் பரம ஆகாச வடிவமான ஆகாய தத்துவமாக வணங்கப்படுகிறது.

யாகசாலையில் காலையில் நடைபெறும் சூரிய வழிபாடும், மாலையில் நடைபெறும் சந்திர வழிபாடும் சூரிய சந்திர வழிபாடாகின்றன.

கும்பாபிஷேக சமயத்தில் ஆசாரியர்களையும் அடியார்களையும் சிவமாகக் கண்டு வழிபடுவது ஆன்ம வழிபாடாகும். இவ்விதம் அஷ்ட மூர்த்தி வழிபாடு செய்யப்படுகிறது.

ஸ்பர்சாருதி

யாகசாலையில் செய்யப்பட்ட ஹோமங்களையும், அவற்றில் ஏற்பட்ட ஆற்றலையும் மூல பிம்பங்களிடத்தில் அங்கக் கம்பிகள் மூலமாகவும், தர்ப்பைக் கயிறு, வெள்ளிக் கம்பி முதலியவை மூலமாகவும் சேர்ப்பிப்பது; மின் ஆற்றலைச் செப்புக் கம்பிகள் மூலம் செலுத்துவதைப் போல, இறைவனது ஆற்றலை அந்த அந்த மூல மூர்த்திகளிடத்தில் சேர்ப்பிப்பது ஸ்பர்சாருதி எனப்படும்.

அஷ்டபந்தனம்

மூர்த்தியையும் பீடத்தையும் ஒன்று சேர்ப்பது அஷ்டபந்தனமாகும். இதற்குத் தேவையான மருந்துப் பொருள்கள் சுக்கான் (சுண்ணாம்புக் கல்), கற்பொடி, குங்கிலியம், கொம்பரக்கு, காவிக் கல், செம்பஞ்சு, உலர்ந்த லிங்கம், வெண்மெழுகு, வெண்ணெய் என்ற எட்டுப் பொருளாகும். இவற்றை இடித்துப் பந்திப்பது அஷ்டபந்தனம் எனப்படும்.

குடமுழுக்கு

யாகசாலையில் அந்த மூர்த்திக்கு எந்தக் குடம் வைத்துப் பூஜிக்கப்படுகிறதோ அந்தக் குடத்து நீரை அந்த மூர்த்திக்கு அபிஷேகம் செய்வது குடமுழுக்கு எனப்படும். அப்போது அந்த மூர்த்தி அந்த விக்கிரகத்தில் எழுந்தருளுகிறார். அந்த விக்கிரகத்திலிருந்து பலவிதத் தெய்விக சக்திகள் வெளிப்படுகின்றன. அவை அந்த மூர்த்தியை வழிபடும் மக்களுக்குப் பல வகையில் அருள்புரிகின்றன.

சிவலிங்கப் பிரதிஷ்டை

கும்பாபிஷேகக் கிரியைகளில் சிவலிங்கப் பிரதிஷ்டை மிகவும் முக்கியமானதாகும். இந்தப் பிரதிஷ்டைச் சடங்கில் பிரதிஷ்டை, ஸ்தாபனம், ஸ்திதி ஸ்தாபனம், ஆஸ்தாபனம், உத்தாபனம் என்று ஐந்து வகை உண்டு. இதில் பீட வடிவமாகிய சக்தியையும், லிங்க வடிவமாகிய சிவத்தையும் சிவாகம முறைப்படி சேர்ப்பது பிரதிஷ்டை எனப்படும். இவ்விதம் பீடத்தையும் பிம்பத்தையும் அசையாமல் பல ஆண்டுக்காலம் காப்பதற்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்படுகிறது.

‘ஸ்தாபனம்’ என்பது பாண லிங்கம், தாது லிங்கம், உலோக லிங்கம் முதலியவற்றை அதன் அதன் இடத்தில் முன்கூறியபடி ஸ்தாபனம் செய்வதாகும். பீடமும் லிங்கமும் ஸபடிகம் போன்ற ஒரே பொருளால் ஸ்தாபனம் செய்வது ‘ஸ்திதி ஸ்தாபனம்’ எனப்படும். லிங்கத்தின் மூன்று பாகங்களையும் தனித் தனியாகச் செய்து பின்பு மகா லிங்கத்தைப் பிரசாத மத்தியில் மந்திர பூர்வமாக ஸ்தாபனம் செய்வது ‘ஆஸ்தாபனம்’ எனப்படும். ‘உத்தாபனம்’ என்பது, ஏற்கனவே உள்ள சிவலிங்கம் சேதமுடையதாக இருந்தால் அந்த இடத்தில் வேறு லிங்கத்தை முன்கூறிய வகையில் ஸ்தாபிப்பதாகும்.

இவ்வாறு அஷ்ட பந்தனம் இட்டுப் பிரதிஷ்டை செய்யும் போது, பிம்பத்திற்கு அடியில் யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவதுண்டு. அந்தந்தத் தெய்வங்களுக்கு உரிய சக்கரத்தைச் செப்புத் தகட்டிலோ, பொன் தகட்டிலோ வரைந்து, அதை ஒரு மண்டலம் வரை பூஜை செய்து அந்தத் தகட்டிற்கு ஆற்றலை உண்டுபண்ணி, அதைப் பிரதிஷ்டை செய்வது வழக்கம்.

இந்த யந்திரங்களே திருக்கோயில்களுக்கு உயிர்நிலையாக விளங்கு கின்றன. யந்திரம் இறைவனது அருட்கருவியாகத் திகழ்ந்து, திருவருட்சக்தியை இரவும் பகலும் இடைவிடாமல் நாற்புறமும் பரப்பிக் கொண்டிருக்கும். எனவே கும்பாபிஷேகக் கிரியைகளில் யந்திரப் பிரதிஷ்டை மிகவும் சிறப்பான அம்சமாகும்.

யாகசாலையில் பூஜையின்போது ஆசாரியர்கள் தங்களுடைய பிராணாயாமத்தால், நியாசங்களால், முத்திரைகளால், கூர்ச்சம் (தர்ப்பை) மாவிலை அமைத்த கும்பங்கள் மூலம் அவற்றிலுள்ள நீரில் ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றனர். யாக முடிவில் அந்தப் புனித நீரைப் பிம்பத்திற்கும் கும்பத்திற்கும் அபிஷேகம் செய்து, மூர்த்திகளும் திருக்கோயில்களும் என்றும் சாந்நித்யம் பெற்று விளங்கும்படி செய்யப்படுகிறது. இதுவே மகா கும்பாபிஷேகம் ஆகும்.

அன்றாடம் கோயில்களிலுள்ள இறைவனிடமிருந்து வெளிப்பட்டுச் செல்லும் திருவருட் சக்திக்கு ஈடுகொடுப்பதற்காகவே தினமும் கோயில்களில் நித்திய நைமித்திக பூஜைகள் நடைபெறுகின்றன. ஆராதனை, பூஜைகள் சரிவர நடைபெறாமல் போனால் நாளடைவில் திருவருட்சக்தி குறைந்துவிடுகிறது. அதனால்தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாகும்பாபிஷேகம் செய்து அங்கு ஆற்றலைப் புதுப்பித்து அதிகரிக்கச் செய்கின்றனர்.

இத்தகைய கும்பாபிஷேகங்களைத் தரிசனம் செய்பவர்கள் தீவினைகள் அகன்று எல்லா நலன்களையும் பெறுவார்கள். அன்று வரை செய்த பாவங்கள் தீரும், சிவ அபசாரங்கள் தீரும், கும்பாபிஷேகமே பெரும் சாந்தி என்று திருஞானசம்பந்தர் கூறியுள்ளார்.

மண்டலாபிஷேகம்

மகா கும்பாபிஷேகம் ஆன பின்பு நாற்பத்தெட்டு நாட்கள் அபிஷேகம் செய்வார்கள். அப்போது பிம்பமும் பீடமும் நன்கு அழுந்திப் பலம் பெறும் பொருட்டு எள் எண்ணெயால் தினமும் அபிஷேகம் செய்வார்கள். கும்பாபிஷேகத்தால் ஏற்பட்டுள்ள சக்தியை மக்கள் இடைவிடாது பெற வேண்டும் என்பதற்காகவும், மக்கள் பக்தியும் அருளும் பெற வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து ஒரு மண்டலம் தினமும் அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, ருத்திரம் மகாருத்திரங்கள் நடைபெறும். இறுதி நாள் பதினொரு கலசங்கள் வைத்து மகா அபிஷேகம் செய்து பூர்த்தி செய்வார்கள். அதுவரை கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இருப்பதாகவே கருதி வழிபட வேண்டும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/spiritual/hindu/p1324.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License