1. எவ்வுயிரிடத்தும் அன்பாய் இரு. அன்பே உயிரின் இயல்பு. எல்லாரிடத்திலும் அன்புடன் பழகு. நீயும் வாழ்; பிறரையும் வாழவிடு. இதுவே அஹிம்சையின் தத்துவம்.
2. ஜீவகாருண்யமே நல்லொழுக்கத்தின் அடிப்படை.
3. ஒரு மனிதனுடைய வாழ்வு இன்பமாகவோ துன்பமாகவோ இருப்பதற்கு அவனே காரணம் அன்றிப் பிறர் இல்லை.
4. தான் செய்த வினை காரணமாக, எந்த ஓர் ஆன்மாவும் விலங்காகவோ மனித னாகவோ தேவனாகவோ நாகனாகவோ பிறவி எடுக்கிறது.
5. அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
6. தாம் தாம் செய்த வினைகளின் பயன் தாம் அனுபவிக்க வேண்டுமேயன்றிப் பிறர் அனுபவிக்க முடியாது; மனைவி மக்கள், உற்றார் உறவினர் சுற்றத்தார் யாராலும் இயலாது.
7. வித்திலிருந்து மரமும், மரத்திலிருந்து வித்தும் உண்டாவகைப் போல, இச்சையி லிருந்து மாயையும், மாயையிலிருந்து இச்சையும் உண்டாகின்றன.
8. அடக்கத்துடன் வாழும் இல்லறத்தார், அடக்கம் இல்லாமல் வாழும் துறவியைவிட மேலானவர்.
9. வெறும் வெளிவேடத்தில் பயன் இல்லை. தலையை மழித்துக் கொள்வதனால் ஒருவன் சிரமணன் ஆகமாட்டான். வேத பாராயணம் செய்வதனால் மட்டும் ஒருவன் பிராம்மணன் ஆக மாட்டான். வனத்தில் வசிப்பதனால் மட்டும் ஒருவன் முனியாக முடியாது. மரவுரி உடுத்துக் கொண்டு, கையில் தர்ப்பையை வைத்திருப்பதனால் மட்டும் ஒருவன் தவசியாகிவிட முடியாது. பரிசுத்த உள்ளத்தாலும் பற்றற்ற நடத்தையாலுமே ஒருவன் உத்தம மனிதன் ஆகிறான்.
10. மூட நம்பிக்கை அறிவுக்கு முட்டுக் கட்டை .
11. கைலைமலையளவு திரண்ட செல்வத்தையும் வெள்ளியையும் பொன்னையும் மணிகளையும் பெற்றபோதிலும் பேராசைக்காரனுக்குத் திருப்தி ஏற்படாது.
12. சான்றோரைப் புகழ்வதனால் மட்டும் வெறும் சான்றோன் ஆக முடியாது. சான் றோரின் வாழ்வை அறிந்து அவர்கள் சென்ற நெறியிலே ஒருவன் செல்லும்போதுதான் அவன் சான்றோர் நிலையை அடைகிறான்.