இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

நிழல் மரங்கள்

மலையாளம்: ஷாஜி வில்சன்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

நீதிமன்ற வளாகத்தில் வாகை மரத்திற்கு அடியில் காரை ஓரமாக நிறுத்தி அலெக்ஸ் இறங்கினான். பின்னால் இருந்த தற்காலிக ஷெட்டில் சுபத்ராவின் டீக் கடை. முன்பு பாசி அண்ணந்தான் கடையை நடத்தி வந்தான். வருடங்களுக்கு முன்பு அண்ணன் வாகன விபத்தில் இறந்து போனான். அதைத் தொடர்ந்து சுபத்ரா கடையை நடத்த வேண்டி வந்தது.

அவர்களுடைய மகள் ஊர்மிளா படிப்பில் கெட்டிக்காரி. இந்தச் சுபத்ராவின் உழைப்பெல்லாம் அவளுக்காகத்தான். வாழ்க்கையை முன்னோக்கிக் கொண்டு போக அவர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை. “சார். பாத்து நாளாச்சே? நல்லா இருக்கீங்களா? டீ தரட்டுமா? சாருக்குப் பிடிச்சமான கொழுக்கட்டையும் இருக்கு”

“ஓ! டீ வேணாம். காலையில இருந்து ரெண்டு டீயாயிடுச்சு. என்ன விஷேஷம்?”. ஊர்மிளா கடையை நோக்கி நடக்கும் போது அலெக்ஸ் கேட்டான்.

எப்போதாவது பார்க்கும்போது ஊர்மிளாவுக்காக அலெக்ஸ் சுபத்ராவுடைய கையில் எதையாவது கொடுப்பான். பயணம் போவதற்கு நடுவில் வாங்கும் புத்தகங்கள். துணிமணிகள். இப்படி ஏதாவது. வெறுமனே காசு கொடுத்தால் அவர்கள் அதைத் தவறாக நினைத்தால்...? பரிவு அல்லது அனுதாபமாக நினைத்தால்...? அந்த எண்ணத்தை அதற்குப் பிறகு அவனால் எப்போதும் மாற்றமுடியாமல் போய்விடும். ஊர்மிளாவைப் பார்க்கும்போது மட்டும் வற்புறுத்தி சுபத்ராவிடம் பணமாக ஏதாவது கொடுப்பான். அலெக்ஸுடைய மகள் டெய்சிக்கும் ஊர்மிளாவுடைய வயதுதான் இருக்கும். ஊர்மிளாவைப் பற்றிப் பேசும்போது, அந்த வயதில் இருக்கும் பெண்களைப் பார்க்கும்போது அலெக்சுக்கு மகள் டியாவுடைய ஞாபகம் தான் வரும். “பால் இல்லாத டீ கொடு. இனிப்பு குறவா இருந்தாப் போதும். ஸ்ட்ராங்காவும் இருக்க வேணாம்”

“சாரோட டீ கணக்கப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்”சந்தோஷத்தோடு சுபத்ரா டீ தயாரிக்க ஆரம்பித்தாள்.

பலர் அவசர அவசரமாக நீதிமன்றத்தை நோக்கிப் போவதை, கடைக்கு முன்னால் நின்றிருந்த அலெக்ஸ் ஆச்சரியத்தோடுப் பார்த்தான்.

வாதிகள். பிரதிவாதிகள். நீதிமன்ற ஊழியர்கள். சின்னதாகக் கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள். எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள். பதில்களுக்கான ஒரு நாள்.

சில வக்கீல் நண்பர்கள் அலெக்ஸுக்கு அருகில் ஓடி வந்தார்கள். நட்பைப் புதுப்பித்துக் கொண்டார்கள்.

நீதிமன்றம் ஆரம்பிக்கும் நேரமாக இருந்ததால் பலரும் நலம் விசாரித்துவிட்டு சட்டென்று நீதிமன்றத்துக்குப் போனார்கள்.

“ஊர்மிளா சுகமா இருக்காளா? அவளோட படிப்பு முடியற காலமாச்சே?” டீ நிறைந்த கோப்பையைக் கையில் வாங்கிக்கொண்டு அலெக்ஸ் கேட்டான்.

“படிப்பு முடிஞ்சுடுச்சு. பேங்க் எக்ஸாமும் எழுதி பாஸ் ஆயிட்டா. இண்டர்வியூ அடுத்த மாசம் ஒம்பதாம் தேதி. கொச்சியில. அண்ணனோட தங்கச்சி மகன் வினுவும் கூடப் போறான். அவன் போலீஸ்ல வேல பாக்கறான். இந்த வயசான காலத்துல எனக்கு தெக்கும் வடக்கும் ஒன்னும் தெரியாது. அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்தா உடனே வேல கிடச்சுடும்”

“அப்ப அவளுக்குக் கல்யாணம் நடத்த வேணாமா?”

“அப்பறம்? வேலை கிடைச்சிடுச்சுன்னா பொருத்தமான ஒரு பையனைக் கண்டுபிடிக்கணும். அப்பறம்தான் நான் கொஞ்சம் நிமிர முடியும். அவளே ஏதாச்சும் ஒர்த்தனப் பாத்து வச்சிருக்காளோ என்னவோ? என்னோட பகவதியே!”. டீயைக் குடித்துவிட்டு காசைக் கொடுத்து விட்டு விடை பெறும் போது சீனியர் அட்வகேட் ரஞ்சித் காரை ஓரமாக ஒதுக்குவதை அலெக்ஸ் பார்த்தான்.

அலெக்ஸின் நண்பன். அருகில் வந்தான். குடும்ப நீதிமன்றத்தில்தான் ரஞ்சித் ப்ராக்டிஸ் செய்கிறான். சொந்த பந்தங்களைப் பிரிப்பதை விட சேர்த்து வைக்கவே பல சமயங்களிலும் ரஞ்சித் முயற்சி செய்வான். மற்ற எல்லோரையும் விட அலெக்சுக்கு அந்த விஷயத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால் பல நேரங்களிலும் அந்த முயற்சிகளுக்கு எதிர்மாறாகவே நடக்கும்.

அலெக்ஸ் மற்றும் மீனாவுடைய விவாகரத்து வழக்கையும் ரஞ்சித்தான் நடத்தினான். இதற்கு நடுவில் அங்குமிங்குமாக இருந்த ஜூனியர்கள் வழக்குகளைப் பற்றி ரஞ்சித்திடம் விவரமாகச் சொல்லி ஆலோசிக்க அருகில் வந்தார்கள். பட்டென்று அன்றைய வழக்குகள் பற்றி அவர்களுக்கு மீண்டும் ஒரு தடவை ஞாபகப்படுத்தி அவன் அவர்களைத் திருப்பி அனுப்பினான்.

“அலெக்ஸ். வா. பாத்தா வேற வேல எதுவும் இருக்கற மாதிரி தெரியல. அவசரமா எதுவும் செய்யறதுக்கு இல்லாதது போலத் தோனுது”. ரஞ்சித் அலெக்ஸை கோர்ட்டுக்கு கூப்பிட்டான். வர்றியா. வர்றதா இருந்தா என்னோட சைடுலேர்ந்து உனக்கு ஒரு சர்ப்ரைஸ்! ஃபைனல் ஹியரிங். வாதப் பிரதிவாதங்க எல்லாம் முடிஞ்சு போச்சு. தீர்ப்பும் உடனே வரும். இதப் பத்தித் தெரிஞ்சுதான் நீ இந்தப் பக்கம் வந்தியா?” ரஞ்சித் கேட்டான்.

“என்ன சொல்ற நீ? எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் பக்கமா வந்தப்ப இங்க வந்தேன்”. சுபத்ராவுடைய கடையில் இருந்து ஒரு டீயை வாங்கினான்.

“நீ தீர்ப்பு வாங்கிக் கொடுக்கற... வீடும் சொந்தக்காரங்களும் இல்லாத... போகற வழி தெரியாம நிக்கற யாராச்சும் ஒருத்தரு தனியாளாப் ஆயிட்டாருன்னா... என்னோட வீட்டுக்கு அவங்கள கூட்டிக்கிட்டுப் போகலாம்ங்கற ஒரு உத்தேசத்தோட இங்க வந்தேன்னு நினைச்சுக்க”

“அப்படின்னா வா”. ரஞ்சித் அலெக்சுடைய தோளில் கையை வைத்தான். அவர்கள் ஒன்றாக நீதிமன்ற அறைக்குள் நடந்தார்கள். ரஞ்சித் உள்ளே போய்விட்டான். வராந்தாவிலும் உள்ளேயும் நல்ல கூட்டம். அலெக்ஸ் கோர்ட் அறைக்குப் பின்னால் வாசலுக்குப் பக்கத்தில் சாய்ந்து கொண்டு நின்றான். அங்கே இருந்து பார்த்தால் உள்ளே நடப்பது நன்றாகத் தெரியும். கேட்கலாம்.

நீதிபதி சேம்பருக்கு வந்து எல்லோரையும் பார்த்து வணங்கி இருக்கையில் அமர்ந்தார். சிஎம்பி 2/4/2012. கிளார்க்கின் உரத்த குரல். சாட்சிக் கூண்டிலும் பிரதி கூண்டிலும் நின்றவர்களைப் பார்த்து அலெக்ஸ் திடுக்கிட்டுப் போனான். வாதியாக தன் மனைவியாக இருந்த மீனா! இன்னொரு பக்கத்தில் மகள் டியா! “ஓ! பெரிசா வளந்திருக்கா!

அம்மாவ அச்சு எடுத்த மாதிரி என்னோட மகள்! அழகி! ஒரு வேள பல வருஷங்களுக்கு அப்புறம் நான் பாக்கறதுனால இருக்கும்” டியாவுக்காகத்தான் ரஞ்சித் வாதாடுகிறான்.

அம்மா தாலாட்டிச் சீராட்டி வளத்த பொண்ணு.அம்மாவுக்கு எதிரா கேஸ் கொடுத்திருக்கா! என்னவா இருக்கும்? அலெக்ஸுக்கு ஆர்வம் அதிகமானது.

அவன் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்தான். டியா தன் கூடப் படித்த ப்ரெடியை விரும்பிக் கல்யாணம் செய்துகொண்டாள். அவளும் ப்ரெடியும் துபாயில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ப்ரெடி வேலை விஷயமாகச் சென்ற ஒரு அலுவலகப் பயணத்தின் போது ஒரு வாகன விபத்தில் சிக்கி இரண்டு வருடமாகப் படுத்த படுக்கையாக இருக்கிறான். அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறாள். கம்பெனிதான் அவனுடைய சிகிச்சைக்கு ஆகும் செலவு எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறது. டியாவுக்கும் அவர்கள் அங்கே வேலை கொடுத்தார்கள். அதனால் துபாயை விட்டுவிட்டு அவர்களால் இப்போதைக்கு நாட்டுக்கு திரும்பி வரமுடியாது.

மீனா இங்கு தனியாக வாழ்கிறாள். துபாய்க்குப் போக அவள் தயாராக இல்லை. துபாய்க்கு வந்து தன்னுடன் இருக்க வேண்டும் என்பதுதான் டியாவுடைய நிலைப்பாடு. வீட்டின் நிலைமையெல்லாம் மீனாவுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும் விட்டுக்கொடுக்க அவள் கொஞ்சமும் தயாராக இல்லை. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு அலைபேசி அழைப்பை எடுக்க வெளியில் வந்து பிறகு அதை இன்னொரு க்ளையன்ட்டிடம் சொல்லிவிட்டுத் திரும்பி வரும் வழியில் ரஞ்சித் அலக்ஸிடம் காரியங்களைச் சுருக்கமாக விவரித்தான்.

“டேய். இந்தக் கேஸ க்ரிமினல் கேஸாவா கொடுத்திருக்கறது? அப்படியா கேஸ் நடக்குது?”. “ஆமாம். அம்மா அப்பாவக் கவனிச்சுக்க மாட்டேன்னு சொன்னா அந்தக் கேஸ கிரிமினல் கேஸாதானே எடுக்கணும்?”. ரஞ்சித் அவசரமாகப் போய் தன் இடத்தில் உட்கார்ந்தான். உடம்பு முடியாமல் இருந்த தன் அம்மாவைக் கவனித்துக் கொள்ள முடியாது என்று சொல்லி சண்டை போட்டு கைக் குழந்தையோடு வீட்டை விட்டு வெளியில் வந்த மீனாவை அலெக்ஸ் அப்போது நினைத்துப் பார்த்தான்.

அவனுக்கு அப்போது அவளிடம் கனிவு ஏற்பட்டது. டியாவுக்கோ அப்பாவைப் பார்த்த ஞாபகம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. மீனாவும் அலெக்ஸும் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்தார்கள். குடும்ப சொந்தக்காரர்கள் சேர்ந்து நடத்தி வைத்த கல்யாணம் அது. மகளுக்கு ஒரு வருடம் கூட ஆகியிருக்காது.

அதற்குள் பிணக்கங்களும் பிரச்சனைகளும் மோசமாயின. ஒன்றுசேர்ந்து வாழமுடியாது என்ற நிலையில் விவாகரத்துக்கு அலெக்ஸ் நிறைய முயற்சி செய்தான். யாரெல்லாமோ மோசமாகக் கூறியதைக் கேட்டு பந்தத்தை அறுத்துக்கொள்ள மீனா முன் வந்தாள்.

அலெக்ஸ் மிகவும் தளர்ந்து போனான். அதற்கு அப்புறம்தான் அலெக்ஸ் சொந்தமாக ஒரு கேர் ஹோம் ஆரம்பித்தான். முடிவில் இப்போது மீனா பாலூட்டி தாலாட்டி வளர்த்த மகள் ஒரு சூழ்நிலை வந்தபோது அவளைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாள்.

“இதுக்கு நானும் ஒரு சாட்சி. முன்ன்னாலேர்ந்தே மீனாவுக்குப் பிடிவாதம் அதிகம்தான். விட்டுக்கொடுக்க மனசில்ல”. கவலைகள் நிறைந்த மனதோடு அலெக்ஸ் ஏதேதோ யோசனை செய்து கொண்டிருந்தான். “ஒன்னு மீனா மகளோட இருக்கணும். இல்லைன்னா சொந்தக்காரங்க கூட இருக்கணும். டியா உதவி செய்யறதுனால சொந்த வீட்டுலயும் இருக்கலாம் இல்லயா? மகள் தன்னுடன் இருக்கணுங்கறது தாயோட தவிர்க்க முடியாத அவசியம்தான்”. அவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் இருக்கிறது இல்லையா? தாய் என்ற நிலையில் மீனா இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா? பரஸ்பரம் விட்டுக்கொடுத்து செய்யவேண்டிய விஷயங்களை எல்லாம் நீதிமன்றத்துக்குக் கொண்டு வர வேண்டுமா?”. அலெக்ஸ் தன் மனம் என்ற நீதிமன்றத்தில் பலதையும் வாதித்தான். நீதிபதியின் சத்தம் உயர்ந்தது. அதை அலெக்ஸ் கவனித்தான்.

“இந்தக் கேஸ்ல அடுத்த மாசம் பத்தாம் தேதி தீர்ப்பு சொல்லப்படும்”

டியா அவசரமாக ரஞ்சித்துடன் சேர்ந்து நீதிமன்ற அறையில் இருந்து வெளியில் வந்தாள். “மகளுக்கு அனுகூலமா தீர்ப்பு உண்டாகும்னு எனக்கு 99 சதவிகிதம் உறுதியாக்கும். சாயங்காலம்தானே மகளோட ப்ளைட்? அங்கிளோட கார் கேட்டுக்குப் பக்கத்துல இருக்கு. ஆனி கார்ல இருக்கான். அவன் வீட்டுல கொண்டு போய் விடுவான். போய் ஃரெஷானதுக்கு அப்புறம் கிளம்பு. ஆனி ஏர்போர்ட்டுல கொண்டுபோய் விடுவான். அப்பறம்... சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத. மகளோட அம்மா பாவமாக்கும். ஒரு பிடிவாதத்துல இப்படி செஞ்சுட்டா. அவ்வளவுதான்”. ரஞ்சித் டியாவிடம் சொன்னான்.

“அம்மாவோட நிலைமை எனக்குப் புரியாம இல்ல அங்கிள். அம்மா ஒரு காம்ப்ரமைஸுக்கும் வரமாட்டேன்னா என்ன செய்யறது? என்னோட விஷயம் அம்மாவுக்கு நல்லாத் தெரியும். ப்ரெடியயும் மகளையும் அழைச்சுக்கிட்டு இப்போ வரமுடியாது”. கண்களைத் துடைத்துக் கொண்டு டியா சொல்வதை சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டு அலெக்ஸ் கேட்டுக்கொண்டிருந்தான்.

நிராசையுடைய நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வரும் மீனாவின் கண்ணில் படாமல் இருக்க வராந்தாவில் இருந்து படிகளில் இறங்கி நின்றான். மீனாவுடைய தலைமுடியும் லேசாக நரைக்க ஆரம்பித்திருந்தது. ஆமா; முன்பு இருந்த பிரகாசத்துக்கு ஒரு குறைவும் ஏற்படவில்லை. அலெக்ஸ் வராந்தாவில் இருந்து தள்ளி நிற்பதை வெளியில் வருவதற்கு முன்பே மீனா பார்த்துவிட்டாள்.

அவள் அவனுக்கு அருகில் நடந்தாள். பின்பக்கம் சென்று மெதுவான குரலில் கேட்டாள். “அலெக்ஸ். நான் பாத்துட்டேன். என் மேல இப்பவும் கோபமா? நான் தப்பு செஞ்சிட்டேன் அலெக்ஸ். கொஞ்ச நாளா எங்கூட யாருமில்ல. நான் ரொம்ப தனியாளா ஆயிட்டேன். மனசுக்குள்ள ரொம்பப் பெரிய பயம். என்னோட பிடிவாதம் நம்ம குடும்ப வாழ்க்கையயும் அழிச்சிடுச்சு. இனிமேல திருத்த முடியாது இல்லயா? சாரி”. சொல்லி முடிப்பதற்குள் அவள் குரல் தழுதழுத்தது.

“ஹ ஹா.. வாழ்க்க முடிஞ்சு போறது ஒன்னும் இல்லடா. எப்ப வேணும்னாலும்... மனசிருந்தா... திருத்தலாம். அன்னிக்கு நீ விட்டுட்டுப் போன வீடும் அம்மாவும் இப்பவும் அங்க இருக்காங்க. அவங்க எப்பவும் படுத்த படுக்கையா. அது மட்டும்தான். கூடவே யாருமில்லாத வேற சில அம்மாக்களும். இனிமேல இருக்கற காலத்த அவங்களோட வாழலாம்னா உன்னோட பிரச்சனைங்க இன்னிக்கே தீர்ந்து போயிடும். அப்படின்னா எங்கூட வா. எங்கிட்ட உன்னோட பிரச்சனைங்கள தீக்கறதுக்கான வேற வழி ஒன்னும் இல்லடா. உன்னோட தனிமையும் பயமும் எல்லாம் அங்க இருக்கற சூழ்நிலையில மாறிடும்.

பதில் எதுவும் சொல்லாமல் மீனா அலெக்ஸுடைய கைகளைச் சேர்த்துப் பிடித்தாள். அவனோடு சேர்ந்து நின்றாள். வராந்தாவில் இருந்து டியா இந்தக் காட்சியைப் பார்த்து சந்தேகத்தோடு ரஞ்சித்தின் முகத்தைப் பார்த்தாள். “உன்னோட அப்பாவாக்கும். நீ பெரியவளா வளந்ததுக்கு அப்பறம் அலெக்ஸ் உன்னப் பாக்கல இல்லயா? அவங்க ரெண்டு பேரும் சேந்துட்டாங்கன்னுதான் தோணுது. சரி... மகள் போயிட்டு வா”

“அங்கிளுக்கு அடுத்த கேசுக்கு நேரமாகுது”

“சரி. போய்ச் சேந்தப்பறம் சொல்லு”. ரஞ்சித் அடுத்த நீதிமன்ற அறைக்குப் போனான்.

டியா காருக்கு அருகில் நடந்தாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/story/translation/p107.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License