இந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தில் இந்து சமயத்தவருக்கான பல புனிதத் தலங்கள் இருக்கின்றன. அவற்றுள், ஓம் பர்வதம், கோமுகம், யமுனோத்திரி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஓம் பர்வதம்
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில், இந்திய - நேபாள எல்லையில் அமைந்த பிதௌரகட் மாவட்டத்தின் வடகிழக்கில் இமயமலையில் 6191 மீ உயரத்தில் ஓம் பர்வதம் அமைந்துள்ளது. இந்தியப் பகுதில் "ஓம்" வடிவம் தெரியுமாறும், நேபாளத்தில் மலையின் பின்புறம் தெரியுமாறும் அமைந்துள்ளது. இந்த மலைக்கு லிட்டில் கைலாஷ், ஆதி கைலாஷ், பாபா கைலாஷ் மற்றும் ஜோங்லிங்கோங் சிகரம் என்ற பெயர்களும் உண்டு. 'ஓம்' அல்லது 'அம்' என்ற வடிவத்தில் பனி படர்ந்திருக்கும் இந்த மலை இந்து, பௌத்தம் மற்றும் சமண மதங்களுக்கு மிகவும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது. ஓம் பர்வத்தின் அருகில் இந்துக்களுக்குப் புனிதமான பார்வதி ஏரி மற்றும் ஜோலிங்க்கோங் ஏரிகள் அமைந்துள்ளன.
கோமுகம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரியின் பனி மூடிய கொடுமுடிகளிலிருந்து பாகீரதி ஆற்றின் உற்பத்தியாகும் இடமாகும். பாகீரதி ஆறு, கங்கை ஆற்றின் தாய் ஆறு ஆகும். இமயமலையில் அமைந்துள்ள கோமுகம், உத்தரகாசி மாவட்டத்தில் 13,200 அடி (4,023 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனிதத் தலமான கங்கோத்ரி கோமுகத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலையேற்ற வீரர்களுக்கு கோமுகம் முக்கியமான இடமாகும். வட மொழியில் கோ என்பதற்கு பசு என்றும், முக் என்பதற்கு முகம் என்றும் பொருளாகும். இக்கொடுமுடி பசுவின் முகம் போன்று காணப்படுவதால் கோமுகம் என்று பெயராயிற்று. கோமுகம், கங்கோத்திரியிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், 4255 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. பனிபடர்ந்த கங்கோத்ரி கொடுமுடியின் பசுவின் முகவாயில் போன்று அமைந்த கோமுகத்திலிருந்து, கங்கை ஆற்றின் தாய் ஆறான பாகீரதி ஆறு உற்பத்தி ஆகிறது.
யமுனோத்திரி
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புனித தலங்களில் ஒன்று யமுனோத்திரி. இங்கு அன்னை யமுனோத்திரி கோயில் உள்ளது. யமுனோத்திரி கடல் மட்டத்திலிருந்து 3293 மீட்டர் உயரத்தில், உத்தரகாசி நகரத்திலிருந்து 30 கி. மீ., தொலைவில் உள்ளது. யமுனோத்திரி கோயில் அருகே வெந்நீர் ஊற்றுகள் உண்டு.