சீதா கல்யாணம்.
சீதையை ராமனிடம் ஒப்படைத்து ஜனகர் அவரிடம், “இவள் உன்னை நிழலெனத் தொடர்வாள்" என்றார்.
ஜனகர் சொன்ன நிழலில், சிறப்பான பொருள் பொதிந்து இருக்கிறது. அதாவது;
நிழல் என்பது முக்காலமும் விழக்கூடியது.
காலை நிழல் - ஒருவரின் பின்னால் விழும். அது போல, ‘ராமா, சீதை உன்னைத் தொடர்ந்து அயோத்திக்கு வருவாள்’
உச்சி நிழல் - நம் உடல் மீதே விழும். ‘ராமா, சீதை உன்னோடு கானகம் வருவாள்’
மாலை நிழல் - நமக்கு முன்னால் விழும். ‘ராவண வதத்திற்காக உனக்கு முன்னால் இலங்கை சென்று காத்திருப்பாள்’
ஜனகர் இவ்வாறு கூறியதன் மூலம் ராமாயண நிகழ்வுகளை முன்பே மறைமுகமாகக் கூறிவிட்டார் என்று பொருள் கொள்ளலாம்.