தெள்ளுதமிழாள்
உனக்கென பிறந்தவள் உனக்கென வாழ்பவள்
உனக்காகவே வாழ தலைப்படுபவள் அவள்
சீரும் சிறப்பும். பேறும் உடையவளை
சிக்கெனப் பிடித்துக்கொண்டு சில்லென நடப்பவள்
சொல்லும் போதே மார்பில் உரத்தவள்
வீறுகொள்ள வைப்பவள் தன்மானமிக்கவள் தன்னலமற்றவள்
பூவையர்களின் பூவானவள் பாவையர்களின் பாவானவள்
கண்ணானவள் மணியானவள் கண்ணின் ஒளியானவள்
என்னவள் எங்கும் நீக்கமற நிறைந்தவள்
பெண்ணவள் அணங்கவள் அன்பானவள் பண்பானவள்
கற்கண்டானவள் பாகானவன் தேனானவள் கனிச்சாரானவள்
எல்லாம் ஆனவள் அவளே என்தெவிட்டாத தெள்ளுதமிழே!
- முனைவர் சாரதா சுப்பிரமணி, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.