எங்களுக்குள் எல்லாம் வரும்!
நானும் அவளும்
அப்படித்தான்
எங்களுக்குள் சண்டை வரும்
எங்களுக்குள் சாந்தம் உடைபடும்
எங்களுக்குள் இடைவெளி வரும்
எங்களுக்குள் தூரம் வரும்
கண்களுக்குள் தூரல் வரும்
எங்களுக்குள் மனக் காய்ச்சல் வரும்
எங்களுக்குள் காதலோ அலைச்சல் படும்
எங்களுக்குள் எல்லாம் வரும்
அடுத்த நாளோ
அதுக்கு அடுத்த நாளோ
வம்புக் கோபத்தில்
அவள் வருவாள்
அன்புத் தாபத்தில்
நான் வருவேன்
நாங்கள் இருவரும்
நாங்களான போது
எங்களுக்குள் சமாதானம் வரும் ...!
- ம. சேரன், வாலாந்தூர், மதுரை மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.