பிடிபடாத சுவாசம்
குருதி குடித்து
திளைத்த வறுமை
மூப்பற்று இருக்கிறது
தோள் தொங்கி.
வற்றிய குளத்தின்
கன்னக் கரைகள்
கெட்டிப்பட்டுக் கிடக்கிறது
இயலாமை ஏக்கத்தில்
வறண்டு.
ஓடிக் கொண்டிருக்கும்
மணிக் காட்டியின்
இயக்க சக்தி
தீரும் தருணத்திற்கு
தினறகிறது
மூச்சு.
பிடிபடாத வாழ்க்கை
அச்சு அசலாக
பிள்ளைகளைப்
பிரதியெடுத்து
கண் முன்னே
காட்டுகிறது
நேற்றைய
இன்றில்
நெருக்கடியைத் தந்து.
இத்தனைக்குமிடையில்
பெடலிடும் போது
குறுக்கு நோவினாலும்
வீசும் தென்றலின்
வாசனையில்
மிதக்கிறது
திக்குத் தெரியாத
மனம்
திசை பிடித்து
யுகம் தோறும்
வெல்லுமாசைகளுடன்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.