அன்புடன் மனிதனாய்..!
எல்லாமும் நம்பாமல் இருந்து
நம்புவதைப் புறம் தள்ளாதிருந்து
சொல்லிலே தேன் கலந்து
உள்ளத்துள் தினம் இனிப்பாகவே
அன்புடன் மனிதனாய் இருந்திடுக...!
உன்னையே கூட கவனிக்கலாம்
தொல்லைகள் தந்து நாட்களில்
துயரங்களில் விழும்படி மனதினில்
தீயையான எண்ணங்கள் தோன்றாது
தூய்மை சிந்தனையில் மிளிர்ந்திடுக...!
ஒவ்வொரு காலடியை வைக்கும் போது
மேடு பள்ளம் பார்த்து பயணம் செய்து
போகுமந்த இடத்தின் இலக்கினை
இடர்கள் இல்லாமல் சென்றடைய
உறுதியின் வீறுகொண்டு நடந்திடுக...!
விழிகள் கொஞ்சம் கவர்ச்சி விரும்பும்
போதுமென்ற கடிவாளம் மாட்டி வை
இருப்பதின் பகிர்வு இயல்பை உணர்ந்து
வரவுக்குள் மீறாத ஆசைகள் பிடியில்
மகிழ்வான பொழுதை நலமாய் ஆக்கிடுக...!
வாழ்வதற்கே பிறந்து வளர்ந்து விட்டு
சின்ன தோல்விகளில் நடுங்குவதோ
உழைப்பின் உயர்வினை நம்பினால்
நாளைய காலமும் நமதானதே என்று
இன்றைய நிடங்களை இனிதாக்கிடுக...!
- காயத்ரி மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.