வாழ்க்கை ஓட்டம்
உடற்பயிற்சி இல்லாமல்
ஒரே இடத்தில் உட்கார்ந்து
செய்யும் வேலை...!
அதுவும் அரசு வேலை...
பெருமையாய் இருந்தது...
காலம் செல்லச் செல்லச்
சோம்பலாகிப் போனது
வாழ்க்கை...!
உடல் பருமனானது
இலவச இணைப்பாய்
சர்க்கரை நோயும்
வந்து சேர்ந்தது...!
உடல் பருமன் மற்றும்
அசைவற்ற வாழ்க்கை முறை
உயர் இரத்த அழுத்தத்தைக்
கொண்டு வந்து சேர்த்தது...!
இரண்டும் வந்த பின்பு
ஒவ்வொரு நோயாய்ச்
சேர்ந்து ஒட்டிக்
கொண்டிருக்கிறது...!
இப்போதைய வாழ்க்கை
நோய்களால் நிறைந்திருக்கிறது
மருத்துவர் கொடுக்கும்
மருந்து மாத்திரைகளில்தான்
வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது...!
- இளங்கோவன் சுப்பிரமணியன், மதுரை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.