கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
| பை, மூட்டை காணல் |
நலம், மக்கட்பேறு உண்டாகும் |
| எழுதிய காகிதத்தைக் காணல் |
துன்பம் |
| மாலை நேரமானதாகக் காணல் |
தீமை |
| கண்ணாடியைக் காணல் |
வறுமையாளர்க்குச் செல்வமும், செல்வந்தருக்கு வருமையும் வந்து சேரும் |
| பாதரட்சையக் காணல் |
சம்போகம் |
| மலத்தை மிதித்ததாகவும், பூசிக் கொண்டதாகக் காணல் |
பொருள் இலாபம் |
| மலத்தைக் காணல் |
போன பொருள் மீளும் |
| தான் குப்பை மீது நிற்கக் காணல் |
செயல் வெற்றி, மக்கட்பேறு அதிகரிப்பு, பொருள் சேர்க்கை |
| சதுரங்கமாடல், சூதாடல், யுத்தம் செய்தல் காணல் |
தீமை |
| தான் சங்கீதம் பாடக் காணல் |
துக்கம் |
| பிறர் சங்கீதம் பாடக் காணல் |
செயல் வெற்றி |
| வீணை, பிடில் முதலியன வாசிக்கக் கேட்கக் காணல் |
சுப நிகழ்ச்சிகள் நடக்கும் |
| மணியடிக்கக் கேட்கக் காணல் |
சுபம் |