முனைவர் தி. கல்பனாதேவி
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், திரு கோவிந்தசமி அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் முனைவர் தி. கல்பனாதேவி, முனைவர் ஸ்ரீவாலாம்பிகை எனும் புனைப்பெயரிலும் எழுதி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுபாக்கம் எனும் ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியரும் சோதிடருமான ப. திருநாவுக்கரசு என்பவரின் மகளான இவர், தமிழில் முதுகலைப் பட்டம், கல்வியியலில் இளங்கலை பட்டம், ஜோதிடத்தில் முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கு பெற்றிருக்கும் இவர், மயிலம் கல்லூரியில் செம்மொழி நிறுவனம் சார்பில் நடத்தப்பெற்ற சங்க இலக்கியம் தொடர்பான கட்டுரைக்கான தேசியக் கருத்தரங்கில் முதற்பரிசைப் பெற்றிருக்கிறார், அனைத்திந்திய இலக்கிய ஆய்வு மாநாட்டில், மலேசியப் பல்கலைக்கழகம் வழங்கிய சிறந்த கட்டுரைக்கான முதல் பரிசினையும் பெற்றிருக்கிறார். அநுராகம் நடத்தியக் கவிதைப் போட்டியில் மாநில அளவில் நான்காவது பரிசு பெற்றுள்ளார்.
இவரது சங்க இலக்கியம், சோதிடம், சித்த மருத்துவம், சமயம் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இதுவரை வெளியாகி இருக்கின்றன. மேலும் இவர்,
1. சாதக அலங்காரத்தில் சித்தர் கருத்துகள் (சூன், 2014)
2. பேராசிரியர் ஆ.சிவலிங்கனார் (2015)
3. பன்முக நோக்கில் சோதிடக் கட்டுரைகள் (2015)
4. பெரிய சோதிட சில்லரைக் கோவை - ஓர் ஆய்வு (சூன், 2015)
5. ஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள் அருளிய திருப்பாமாலைகளில் உள்ள சிறப்புகள் (2016)
6. ஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள் அருளிய திருப்பாமாலைகள் மூலமும் உரையும் (பிப்ரவரி, 2019)
7. பரமசிவன் பார்வதிக்கு உபதேசித்த மழைக்குறி சாஸ்திரம் மூலமும் உரையும் ஓர் ஆய்வுக் கண்ணோட்டம் (பிப்ரவரி, 2019)
8. வானியல் கலைக்களஞ்சியம் (பிப்ரவரி, 2019)
9. பன்முக நோக்கில் வானியல் சிந்தனைகள் (ஏப்ரல், 2019)
10. பன்முக நோக்கில் இலக்கியச் சிந்தனைகள் (மே, 2019)
11. பன்முக நூக்கில் பக்தி இலக்கியச் சிந்தனைகள் (மே, 2019)
எனும் 11 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகம் - இந்து சமயம்
ஜோதிடம் - தொடர்
ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
ஜோதிடம் - உங்கள் லக்கின பலன்கள்
ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள்
பொன்மொழிகள்
கட்டுரை - பொதுக்கட்டுரைகள்
கட்டுரை - இலக்கியம்
கவிதை
குறுந்தகவல்
சமையல் - குழம்பு & ரசம்
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.