முத்துக்கமலம் மின்னிதழின் கட்டுரைப் பக்கத்திற்கு இணைப்பு
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாட நூல்களில், பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் "பண்பாடு - விருந்து போற்றுதும்" என்ற பாடத்தின் பின்பகுதியில் (69 ஆம் பக்கத்தில்) ‘இணையத்தில் காண்க’ எனும் தலைப்பின் கீழ் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான, சிவகாசி, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மா. பத்மபிரியா அவர்கள் எழுதிய, ‘தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல்’ எனும் கட்டுரைக்கான இணையப் பக்க முகவரி:
http://www.muthukamalam.com/essay/literature/p113.html
கொடுக்கப்பட்டிருக்கிறது.
முழுப்பக்கம் பார்க்க:
இணையத்தில் காண்க எனும் தலைப்பின் கீழ் குறிப்பிட்ட இடத்தை மட்டும் காண:
இதன் மூலம் பத்தாம் வகுப்பு தமிழாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணையத்தில் முத்துக்கமலம் இணைய இதழினைப் பார்வையிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கும், பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல் உருவாக்கத்திற்கான வல்லுநர்கள், மேலாய்வாளர்கள், கலை மற்றும் வடிவமைப்புக்குழுவினர், பாடநூல் உருவாக்கக் குழுவினர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைவருக்கும் நன்றி.
- ஆசிரியர் குழுவினர்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.