விபூதியின் தத்துவம்
விபூதி என்பது மேலான செல்வம் என்ற பொருளுடையது.
உலகிலுள்ள அனைத்துச் செல்வங்களும் இறைவனின் அருளாகிய செல்வத்தால் ஆனவை. எனவே, அந்த அருட்செல்வமே மேலான செல்வமாகும். அம்மேலான செல்வத்தைக் குறிப்பது விபூதி.
விபூதிக்கு இன்னொரு பெயர் திருநீறு.
நீற்றப்பட்டது நீறு. அது அழிவதில்லை. அது வேறு பொருளாக மாறுவதுமில்லை. தோன்றிய உலகமெல்லாம் அழியும் போது, அழிவில்லாததும், மாற்றமில்லாததுமான நிலையை அது அடையும்.
இதுவே விபூதியின் தத்துவம்.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.