காட்டிற்குள் இருந்த சிங்கம் கர்ஜித்தது.
இதைப் பார்த்த புலி, “ஏன் எல்லோருக்கும் கேட்கும்படி இவ்வளவு பயங்கரமாக கர்ஜிக்கிறாய்?” என்று சிங்கத்தைப் பார்த்துக் கேட்டது.
“என்னைக் காட்டுக்கே அரசன் என்று எல்லோரும் ஒப்புக் கொள்வதே நான் அப்படிக் கர்ஜனை செய்து என்னை அடையாளப்படுத்துவதால்தான்” என்று பதில் சொன்னது சிங்கம்.
புதரின் மறைவில் மறைந்திருந்த முயல் இந்த இரண்டு விலங்குகளின் பேச்சுக்களையும் கேட்டது. தானும் சிங்கத்தைப் போல் குரலெழுப்பித் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தது.
தான் இருந்த இடத்தில் இருந்தபடியே பெரிதாகக் குரல் எழுப்பியது.
அந்த வழியே வந்த ஓநாய் குரல் வந்த இடத்தில் பாய்ந்து முயலைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது.
உயிர் போகும் பொழுதுதான் முயலுக்கு, “தகுதி இருந்து அடையாளப்படுத்திக் கொண்டால்தான் மதிப்பு உண்டு. இல்லையேல், எனக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்” என்கிற ஞானம் பிறந்தது.