பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
சுவாமி சின்மயானந்தா ஒருமுறை சென்னையில் கீத ஞான யக்ஞம் நடத்துவதற்குச் சரியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார்.
அந்தணர்கள் வசமிருந்த பலகோவில்கள் அவருக்கு இடம் கொடுக்க மறுத்தன.
அப்போது அவரது சீடர் அவரிடம் ஓடி வந்தார். "ஒரு இசுலாம் இனத்தவர் தனது இடத்தைக் கொடுக்கிறேன்" என்று சொல்கிறார், "ஆனால்" என்று தயங்கியவாறே, "அந்த இடம் பேய் இருக்கும் இடமாம்" என்று சொன்னார்.
சுவாமி உடனே," அதனாலென்ன, நான் இன்னும் பேயைப் பார்த்ததே இல்லை. ஒரு நல்ல சந்தர்ப்பம்" என்றார்.
- டி. எஸ். பத்மநாபன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.