கண்ணதாசன் நகைச்சுவைகள்
"நன்கொடை என்பது என்ன?"
"வாங்குகிறவனை நன்றாக ஆக்குவது. கொடுப்பவனை None ஆக ஆக்குவது"
*****
"ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட முடிவதில்லை"
"ஏன்?"
"ஓட்டுப் போடும் வயது இன்னும் வரவில்லை"
*****
"கலியுகத்தில் கண்ணன் என்னென்ன நட்க்குமென்று சொன்னபோது மற்றுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறான்"
"அதுவென்ன மற்றுமொரு கருத்து?"
"நடிகையின் பாட்டி அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்"
*****
"காந்தியைப் போல் எல்லோரும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?"
"கடலை வியாபாரம் நன்றாக நடக்கும்."
*****
"பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலுள்ள பலரை விசாரித்ததில்..."
"எப்படி பைத்தியமானார்கள்?"
"சினிமா நடிகைகளை மேக்கப்பில்லாமல் பார்த்ததினால்"
நன்றி: கண்ணதாசன் செப்பு மொழிகள் நூல்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.