ஐந்து பெண்களைப் பெற்று ஏழையாக இருந்த ஒருவனைப் பொருள் சேர்த்துக் கொண்டு வரும்படி வீட்டை விட்டு அனுப்பினாள் அவன் மனைவி.
அவன் சில ஊர்களைச் சுற்றிவிட்டு ஸ்ரீரங்கம் சென்று திருவரங்கன் சன்னதியில் நின்று கொண்டு, “ஏன் சுவாமி! உமக்கும் ஐந்து பெண்கள் பிறந்திருந்தால் இப்படி நிம்மதியாகப் படுத்து உறங்க முடியுமா?” என்று சப்தமாகக் கேட்டார்.
அதைக் கேட்ட அருகிலிருந்த அடியார் ஒருவர், “இறைவனைப் பார்த்து இப்படி கேள்வி கேட்கலாமா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த ஏழை, “ஸ்ரீ ரங்கநாதர் எனக்கு உறவினர். எனவே அவரிடம் அப்படிக் கேட்பதில் தவறு ஒன்றுமில்லை” என்றான்.
அந்த அடியார் ஸ்ரீ ரங்கநாதர் உனக்கு உறவினரா? என்றபடி அவனைப் பார்த்தார்.
உடனே அவன் சொன்னான்.
“ஆமாம் அய்யா! ஸ்ரீ ரங்கநாதர் செல்வத்திற்கு அதிபதியான இலக்குமியின் கணவர். நான் இலக்குமியின் அக்காவான மூதேவியை (தரித்திரத்தை) அல்லவா மணந்து கொண்டிருக்கிறேன்”