குறைச்சுத்தான் எடை போடறாரு...!
குரு. சுப்பிரமணியன்
ஒருவன்: உன் மனைவி நீ கேட்கிற கேள்விக்கு உடனே "பட்டு"ன்னு பதில் சொல்லிடுவாங்களா ஆச்சர்யமாயிருக்கே...!
மற்றவன்: ஆமாம். நான் உனக்கு என்ன புடவை பிடிக்கும்ன்னு தான் கேட்பேன்...!
*****
ஒருவன்: லேடீஸ் நெஞ்சைத் தொடும்படியா ஒரு படம் எடுக்கப் போறேன், என்ன பேரு வைக்கலாம்...?
மற்றவன்: பிரா-ன்னு வைத்திடு...!
*****
ஒருவன்: அந்த ஆளு எப்பவும் என்னைக் குறைச்சுத்தான் எடை போடறாரு...!
மற்றவன்: ரேசன் கடையில வேலை பார்க்கிறவர் அப்படித்தானிருப்பார்...!!
*****
ஒருவன்: விமானம் எரிஞ்சு விழுந்ததுன்னு பேப்பர்லே போட்டிருக்கானே...!
மற்றவன்: யார் மேலே எரிஞ்சு விழுந்ததாம்?
*****
ஒருவன்: உடம்பெல்லாம் பொரிப் பொரியா வருது டாக்டர்...!
டாக்டர்: பொரிக்கடை வச்சிடுங்களேன்...!!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.