முத்துக்கமலம் - பரிசுத் திட்டம்
முத்துக்கமலம் 1-6-2017 முதல் பன்னிரண்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பன்னிரண்டாம் ஆண்டுத் தொடக்கம் முதல் முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெறும் படைப்புகளில் சிறந்த கதைக்கு ‘சென்னை, கௌதம் பதிப்பகம்’, சிறந்த கட்டுரைக்கு ‘தஞ்சாவூர் கமலினி பதிப்பகம்’, சிறந்த கவிதைக்கு ‘வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம்’ ஆகியவை பரிசாக நூல்களை வழங்க ஒப்புக் கொண்டிருக்கின்றன. முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெற்றிருக்கும் கதை, கட்டுரை, கவிதை போன்ற படைப்புகள் தவிர்த்த பிற படைப்புகளுக்குப் பரிசு வழங்கிட விரும்பும் அமைப்புகள் / நிறுவனங்கள் / பதிப்பகங்கள் / விற்பனையகங்கள் தொடர்பு கொள்ளலாம். நூல் மட்டுமே பரிசாக அளிக்க வேண்டுமென்பதில்லை, வேறு பயன்படக்கூடியதான பரிசுகளையும் வழங்கலாம்.
அமைப்பு / நிறுவனம் / பதிப்பகம் / விற்பனையகம் என்ன செய்ய வேண்டும்?
* முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு தலைப்புகளிலான படைப்புகளில் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
* ஒவ்வொரு புதுப்பித்தலிலும் அந்தத் தலைப்பில் இடம் பெறும் படைப்புகளில் ஒன்றைத் தாங்களே தேர்வு செய்து, ரூ 100/- க்குக் குறையாத நூல் அல்லது வேறு பயன்படுத்தக்கூடிய பொருள் ஒன்றினைப் பரிசாக அளிக்கலாம்.
* படைப்பாளரின் முகவரிக்கு நூல் /பொருளினைப் பரிசாகத் தாங்களே அனுப்பி வைக்க வேண்டும்.
* குறைந்தது மூன்று மாதங்களுக்கு, அதாவது ஆறு புதுப்பித்தலுக்குப் பரிசளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு புதுப்பித்தலுக்கும் எந்த நூல் / என்ன பொருள் பரிசாக அளிக்கப்படுகிறது? என்கிற விவரத்தினை முன்பே தெரிவித்திட வேண்டும்
இந்தியப் படைப்பாளர்களுக்கு மட்டுமே பரிசு!
இப்பரிசு இந்தியாவிற்குள் இருக்கும் படைப்பாளர்களுக்கு மட்டுமானது. வெளிநாட்டில் வசித்து வருபவர்கள் இந்தியாவில் இருப்பவர்களது முகவரி அளித்தால் அவர்களுக்கு அந்தப் பரிசு அனுப்பி வைக்கப்படும்.
|
முத்துக்கமலம் இணைய இதழ் என்ன செய்யும்?
* பரிசளிக்க விரும்பும் அமைப்பு / நிறுவனம் / பதிப்பகம் / விற்பனையகங்களுக்கு முத்துக்கமலம் இணைய இதழின் புதிய வடிவமைப்பிலிருக்கும் அனைத்துப் பக்கங்களிலும் மூன்று மாத காலத்திற்கு 300 x 198 பிக்சல்ஸ் அளவில் விளம்பரம் ஒன்று இடம் பெறச் செய்யும்.
* அமைப்பு / பதிப்பகம் / விற்பனையகம் இணையதளத்தைக் கொண்டிருப்பின் அப்பக்கத்திற்குச் செல்வதற்கான இணைப்பு வசதி செய்யப்படும்.
* ஒவ்வொரு புதுப்பித்தலிலும் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், படைப்பாளர் முகவரி குறித்த விவரம் அடுத்தப் புதுப்பித்தலில் இடம் பெறும்,
* பரிசளிக்கும் அமைப்பு / நிறுவனம் / பதிப்பகம் / விற்பனையகம் அடுத்த பத்து நாட்களுக்குள் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசினை அனுப்பி வைத்திட வேண்டும்.
* அப்படிச் செய்யப்படாத நிலையில் முத்துக்கமலம் இணைய இதழிலிருந்து அந்த அமைப்பு / பதிப்பகம் / நிறுவனம் / விற்பனையகம் குறித்த அனைத்துத் தகவல்களும் உடனடியாக நீக்கப்படும்.
தொடர்புக்கு
தங்கள் அமைப்பு / நிறுவனம் / பதிப்பகம் / விற்பனையகம் தேர்வு செய்ய விரும்பும் தலைப்பு மற்றும் பரிசளிக்க விரும்பும் நூல்களின் ஆசிரியர், பதிப்பாளர், போன்ற விவரங்களுடன் அல்லது அளிக்கும் பரிசுப் பொருட்கள் குறித்த விவரங்களுடன் msmuthukamalam@gmail.com அல்லது msmuthukamalam@yahoo.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களது ஒப்புதலை அனுப்பி வைக்கலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9940785925, 9042247133 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.