கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
இந்து சமயக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன் அமைக்கப்படுகின்றன என்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. அவை;
1. கோயில் விமானம் மற்றும் கோபுரம் ஆகிய பகுதிகளில் திருஷ்டிப்படாமலிருப்பதற்காக அமைக்கப்படுகின்றன.
2. கோயில்களில் இடம் பெறும் சிற்பங்கள் பெரும்பான்மையாக புராண, இதிகாசச் சிற்பங்கள் மற்றும் மனித வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கும் பாலியலைத் தவறாகவோ புனிதமற்றதென்றோ கருத வேண்டியதில்லை. எனவே, இத்தகு பாலியல் சிற்பங்கள் இடம் பெறுகின்றன.
3. ஆகமங்களில் இத்தகு பாலியல் சிற்பங்களைக் கோபுரம் மற்றும் விமானங்களில் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் இவை கோயில்களில் அமைக்கப்படுகின்றன.
4. மனிதன் கோயிலுக்குள் செல்லும் போது மனத்தை கண்டபடி ஓடவிடாது, அடக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தகு பாலியல் சிற்பங்கள் கோயில்களில் இட பெறுகின்றன.
- எஸ். நடராஜன் எழுதிய ஆலயங்களும் ஆகமங்களும் நூலிலிருந்து
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.