அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
தேனி. எஸ். மாரியப்பன்
ஒருவன்: நான் சொர்க்கத்திற்குப் போக வழி எப்படின்னு ஒரு சாமியார்கிட்ட கேட்டேன். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னார்.
மற்றவன்: ஏன்?
ஒருவன்: நரகத்தின் வேதனையை இங்கேயே அனுபவித்து விட்டால் அடுத்து சொர்க்கம்தானே என்கிறார்.
*****
ஒருவன்: உன் மனைவி பேரு அபிராமியா? “அபி”ன்னு கூப்பிடுறீயே?
மற்றவன்: இல்லடா அவ பேரு அகிலா. அடங்காப்பிடாரி என்பதைச் சுருக்கி அபின்னு கூப்பிடுறேன்.
*****
ஒருவன்: காதலுக்கு இவ்வளவு சக்தி இருக்குன்னு தெரியாமல் போச்சு!
மற்றவன்: எப்படிச் சொல்ற...?
ஒருவன்: நாங்க ரெண்டு பேரும் இன்னும் சந்திக்கவே இல்லை. ஆனால் அவ குழந்தை பெற்றுக்கிட்டேன்னு சொல்றாளே...?
*****
ஒருவன்: தலையிலே என்ன கட்டு?
மற்றவன்: என் மனைவியிடம் மகாலட்சுமிக்கு அக்கா மாதிரி இருக்கேன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்.
*****
ஒருவன்: நீ பார்த்த பொண்ணு உன் அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சா? எப்படி?
மற்றவன்: சண்டையில எங்க அம்மாவைச் ஜெயிக்க வச்சுட்டாளே...!
*****
ஒருவன்: உன் காதலிக்குப் பட்டுச் சேலை எடுத்துக் கொடுத்ததற்கு உன்னைக் கைது பண்ணிட்டாங்களா? ஏன்?
மற்றவன்: நான் கடைக்காரருக்குத் தெரியாமல் எடுத்துக் கொடுத்தேன்.
*****
ஒருவன்: என் மனைவி பொறுமையில் எல்லை மீற மாட்டாள்
மற்றவன்: எப்படி?
ஒருவன்: எத்தனையோ நாள் என்னை அடிச்சிருக்காள்... ஒரு நாள் கூட அடித்துக் காயமேற்படுத்தினதில்லை... வீக்கம் மட்டுதான் இருக்கும்.
*****
ஒருவன்: உங்க மாப்பிள்ளை வரதட்சணை, நகை எதுவும் வேண்டாமின்னு சொல்லிட்டாரா? ஆச்சரியமா இருக்கே...?
மற்றவன்: அவருக்கு ஒரு கிரவுண்டில வீடு மட்டும் போதுமாம்!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.