குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
குரு.சுப்ரமணியன்
ஒருவன்: உங்க மனைவிக்கு உடம்பிலே நிறைய கொழுப்பு இருக்கு!
மற்றவன்: நீங்க இப்போதான் சொல்றீங்க, டாக்டர். எனக்கு கல்யாணமான அடுத்த மாசமே தெரிஞ்சு போச்சு.?
*****
ஒருவன்: ஆபரேஷன் பண்றப்போ டாக்டர் ஏன் நர்ஸை அவர் ரெண்டு காதையும் பொத்தச் சொல்றார்?.
மற்றவன்: பேஷன்ட்டோட மரண ஓலம் காதிலே விழக் கூடாதுன்னுதான்?
*****
ஒருவன்: என்ன தரகரே, பெண்ணைக் காட்டறேன்னு சொல்லிட்டுக் கூன் விழுந்த கிழவியைக் காட்டறீங்க?
தரகர்: நீங்கதானே குனிஞ்ச தலை நிமிராத பெண்ணா வேணும்னு சொன்னீங்க?
*****
ஒருவன்: கல்யாணப் பொண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டிலே கழுத்திலே என்ன போடறாங்களாம்?
மற்றவன்: ரோஜா மாலைதான்..!
*****
ஒருவன்: அந்த ஆளு ராத்திரி முழுக்க தூக்கம் வரலைன்னு டாக்டர்கிட்டே போனாரே, என்ன ஆச்சு?
மற்றவன்: அவருக்குத் தெரிஞ்ச கம்பெனிலே அவனை நைட் வாட்ச்மேன் வேலைல சேர்த்து விட்டுட்டார்..!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.