வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் விற்பனை வரியைப் பற்றிய விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்பொழுது, “நான் ஒரு உற்பத்தியாளர், வணிகர் என்கிற முறையில் சொல்கிறேன். எங்களை இந்தப் பலமுனை விற்பனை வரி கடுமையாகப் பாதிக்கும்” என்றார் மிஷ்ரிலால் எனும் உறுப்பினர்.
“வரியைச் செலுத்தாமல் எப்படி ஏமாற்றலாம் என்பதை வணிகராகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று கேட்டார் காஜி எனும் உறுப்பினர். இவர் ஒரு வழக்கறிஞரும் கூட.
“இது போன்ற நிலையில் வணிகர்களுக்கு வழக்கறிஞரான தாங்கள்தான் ஆலோசனை அளிக்க வேண்டும்” என்றார் மிஷ்ரிலால்.
- தேனி.பொன்.கணேஷ்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.