வேள்விகளில் கீழ்க்காணும் வேள்விகள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. இந்த வேள்வி செய்வதால், ஏற்படும் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
கணபதி வேள்வி
இந்த வேள்வி செய்திடக் காரியத் தடை நீங்கும். எந்தச் செயல்கள் செய்தாலும் அதில் வெற்றி பெறுவர்.
சண்டி வேள்வி
இந்த வேள்வி செய்திடத் தரித்திரம் நீங்கி வாழ்வில் செல்வம் சேரும். பயம் விலகும்.
நவக்கிரக வேள்வி
இந்த வேள்வி நவக்கிரகங்களினால் உண்டான தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் வளம் கொழிக்கச் செய்யும்.
சுதர்சன வேள்வி
இந்த வேள்வி செய்வதால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெறுவார். பேய் , பிசாசு, ஏவல், பில்லி, சூனியத்தில் இருந்து விடுபடுவர்.
ருத்ர வேள்வி
இந்த வேள்வி செய்வதால் நீண்ட ஆயுள் பெறலாம்.
மிருத்யுஞ்ச வேள்வி
இந்த வேள்வி செய்பவர்களுக்குப் பிரேதத்தினால் வந்த சாபம் நீங்கும். மந்தியினால் வந்த தோஷம் போகும்.
புத்திர காமேஷ்டி வேள்வி
இந்த வேள்வி செய்வதால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும்.
சுயம்வர வேள்வி
இந்த வேள்வியைச் செய்வதால் பெண்களுக்கு வரும் திருமண தடை விலகி விரைவில் சுயம்வரம் நிகழும்.
ஸ்ரீ காந்தர்வ ராஜ வேள்வி
இந்த வேள்வி செய்வதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படும் திருமணத் தடை நீங்கும்.
லக்ஷ்மி குபேர வேள்வி
இந்த வேள்வி செய்யப்பட்ட இடத்தில் செல்வம் பெருகும். பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து, பொருளாதார வளம் அதிகமாகும்.
தில வேள்வி
இந்த வேள்வி செய்வதன் மூலம் சனி தோஷம் நீங்கி, பித்ரு தோஷம் நீங்கும்.
ஸ்ரீ பிரத்தியங்கிரா வேள்வி
இந்த வேள்வி செய்பவர்களுக்கு எதிரிகளால் வரும் தும்பம் போகும். எதிரிகள் தொல்லை இருக்காது. நோய்களில் இருந்து விடுபடலாம்.
ஸ்ரீ பிரம்மஹத்தி வேள்வி
எதிரிகளின் தொல்லைகள் நீங்கி எடுத்தட காரியத்தில் வெற்றியும் நன்மையும் கிட்டும்.
கண்திருஷ்டி வேள்வி
இந்த வேள்வி செய்யுமிடத்தில் காரியத்தினால் வந்த சிக்கல்கள் விலகிக் கண் திருஷ்டி குறையும்.
கால சர்ப்ப வேள்வி
இந்த வேள்வியால், திருமணத்தினால் வந்த தடை நீங்கும். வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி வளம் பெருகும். உத்தியோகத்தினால் வந்த தடைகள் விலகும்.