இராமேஸ்வரம் சென்று வழிபடுபவர்கள் அங்கிருக்கும் அக்கினி தீர்த்தம் எனப்படும் கடலில் முதலில் நீராடிவிட்டு, அதன் பிறகு 22 தீர்த்தங்களில் நீராடுவதல் அனைத்து வளங்களையும் பெறமுடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த 22 தீர்த்தங்களின் பெயர்களும், அதனால் கிடைக்கும் பலன்களும்;
1. மகாலெட்சுமி தீர்த்தம்
இதில் நீராடுவதால் அனைத்தும் செல்வ வளங்களையும் பெறலாம்.
2. சாவித்திரி தீர்த்தம்
3. காயத்ரி தீர்த்தம்
4. சரஸ்வதி தீர்த்தம்
மேற்காணும் மூன்று தீர்த்தங்களில் நீராடுவதால் சமயச் சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் போன்றோர் விரும்பியதை அடையலாம்.
5. சேது மாதவ தீர்த்தம்
இதில் நீராடுவதால் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.
6. நள தீர்த்தம்
இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
7. நீல தீர்த்தம்
இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
8. கவாய தீர்த்தம்
இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மன வலிமை, உடல் நலம் கிடைக்கும்.
9. கவாட்ச தீர்த்தம்
இதில் நீராடுவதால் நரகத்திற்குச் செல்ல மாட்டார்கள். மன வலிமை, உடல் நலம் கிடைக்கும்.
10. கந்நமாதன தீர்த்தம்
இதில் நீராடுவதால் ஏழ்மை நீங்கி செல்வ வளம் பெறுவர்.
11. சங்கு தீர்த்தம்
இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.
12. சக்கர தீர்த்தம்
இதில் நீராடுவதால் உடல் குறைபாடுகள் நீங்கி நலமடைவர்.
13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்
இதில் நீராடுவதால்பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நீங்கும்.
14. சூர்ய தீர்த்தம்
இதில் நீராடுவதால் திரிகாலஞானம் கிடைக்கும்.
15. சந்திர தீர்த்தம்
இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.
16. கங்கா தீர்த்தம்
17. யமுனா தீர்த்தம்
18. கயா தீர்த்தம்
மேற்காணும் மூன்று தீர்தத்தங்களிலும் நீராடுவதனால் நோய், வயது மூப்பால் வரும் துன்பம், அஞ்ஞானம் நீங்கி முக்தி கிடைக்கும்.
19. சாத்யாம்ருத தீர்த்தம்
இதில் நீராடினால் தேவதாகோபம், பிராமண சாபம் சரியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி கிடைக்கும்.
20. சிவ தீர்த்தம்
இதில் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
21. சர்வ தீர்த்தம்
இதில் நீராடினால் பார்வைக் குறைபாடு, நரை நீங்கி வளமடையலாம்.
22. கோடி தீர்த்தம்
இந்த தீர்த்தம் இராமர், சிவலிங்க பிரதிஷடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமர் தன் அம்பின் நுனியைப் பூமியில் வைத்து அழுத்தியதால் தோன்றியது. இதனைக் கோடி தீர்த்தம் என்கின்றனர். இத்தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு மறுபிறவி இல்லாத முக்தி கிடைக்கும். இத்தீர்த்தத்தில் நீராடிய பின், இவ்வூரில் இரவு தங்கக் கூடாது என்பது தொன்ம நம்பிக்கை.