தமிழ் கருத்தரங்கக் கட்டுரைகள்
- முனைவர் த. கண்ணன் & முனைவர் கோ. இரவிச்சந்திரன்
(கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்)
- முனைவர் துரை. மணிகண்டன்
(கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்)
- முனைவர் மு. பழனியப்பன்
(கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்)
வேண்டுகோள்
தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்த்துறையின் வழியாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அல்லது வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்தோ அல்லது கல்லூரியின் வழியாகத் தனித்தோ தமிழ் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுக் கருத்தரங்குகளில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், தமிழ்த்துறை ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களது தமிழ் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்து வாசித்து வருகின்றனர். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் கருத்தரங்கம் முடிவுற்ற நாளுடன் முடிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. மேலும், இக்கருத்தரங்கக் கட்டுரைகள் பெரும்பான்மையாகக் கருத்தரங்கில் பங்கு பெற்றவர்கள் மட்டுமே அறிந்ததாக முடிந்து போய் விடுகின்றன. இந்தக் கருத்தரங்கக் கட்டுரைகள் அனைத்தையும் கருத்தரங்கத் தலைப்புகள் வாரியாகத் தொகுத்தளிக்க முத்துக்கமலம் இணைய இதழ் முன் வருகிறது.
கல்லூரிகளில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட பேராசிரியர்கள் தங்களுடைய கல்லூரியில் நடத்தப் பெற்ற கருத்தரங்கக் கட்டுரைகள் அனைத்தையும் தாங்கள் அளித்த தலைப்பின் பெயரிலேயே முத்துக்கமலம் இணைய இதழின் “தமிழ் கருத்தரங்கக் கட்டுரைகள்” எனும் பகுதியில் இலவசமாக வெளியிடலாம்.
தங்கள் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் கருத்தரங்கத் தலைப்பு, நடத்தப் பெற்ற நாட்கள், தாங்கள் அளிக்க விரும்பும் கருத்தரங்கம் குறித்த செய்தி ஆகியவற்றுடன் கருத்தரங்கத் தொடக்கம் மற்றும் நிறைவு ஒளிப்படங்கள் (இரு படங்கள் மட்டும்) இணைத்து அனுப்பி வைக்கலாம்.
கருத்தரங்கக் கட்டுரைகள் அனைத்தும் கருத்தரங்கத் தலைப்பின் கீழாக ஆய்வாளர்கள்/ஆர்வலர்கள் வழங்கிய கட்டுரைத் தலைப்புகள் வரிசையில் தனித்தனியாக இடம் பெறும்.ஒவ்வொரு கட்டுரையிலும் அந்தக் கட்டுரையாளரின் பெயர், முகவரி போன்றவைகளும் இடம் பெறும்.
வேண்டுகோள்:
இக்கட்டுரைகளை அனுப்பி வைக்கும் போது இக்கட்டுரைகள் அனைத்தையும் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியிடுவதற்கான தங்கள் ஒப்புதல் கடிதத்தையும் மின்னஞ்சல் வழியாக இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
msmuthukamalam@gmail.com
msmuthukamalam@yahoo.co.in
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.