எலிக்கு ஊசி போட்டாச்சா?
அறிஞர் அண்ணா தோழர் இராசகோபால் என்பவரை அடிக்கடி கிண்டல் செய்து கொண்டேயிருப்பார். ஒரு சமயம் தோழர் இராசகோபால் அவர்கள் அண்ணாவிடம் வந்து தம்மை இரவு எலி ஒன்று கடித்து விட்டதாகக் கூறினார்.
அண்ணா அவர்கள் சிரித்துக் கொண்டே எலியா? உன்னையா? என்று கேட்டார்.
”ஆமாங்க! என்னைத்தான் எலி கடித்துவிட்டது!” என்று தோழர் இராசகோபால் இரக்கம் தோன்றக் கூறினார்.
”ஊசி போடனுமே! ஊசி போட்டாச்சா?” என்று அண்ணா கேட்க, உடனே இராசகோபால் இன்னும் போட்டுக்கலிங்க! என்று கூறினார்.
உடனே அண்ணா யாருக்கு ஊசி என்று இராசகோபாலைப் பார்த்துக் கேட்டார்.
எனக்குத்தான்! என்று இராசகோபால் அவசரமாகக் கூறினார்.
அண்ணா அவர்கள் சிர்த்துக் கொண்டே உனக்கல்ல! அந்த எலிக்கு ஊசி போட்டாச்சா என்றுதான் கேட்டேன்! என்றார்.
”எலிக்கு ஏன் ஊசி?” என்று இராசகோபால் கேட்க,
அதற்கு அண்ணா, அதனுடைய விசம் உன்னைப் பாதிப்பதை விட, உன்னுடைய விஷம் அதனை அகிமாகப் பாதிக்கச் செய்திருக்கும்!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
- சித்ரா பலவேசம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.