வீரப்பலகாரம் தெரியுமா?
ஒரு முறை சுப்பிரமணிய பாரதியார் பொதுக்கூட்டம் ஒன்றில் வீராவேஷத்துடன் பேசி முடித்தார். அங்கு கூடியிருந்த மக்கள் அவரது பேச்சை ரசித்துக் கேட்டனர்.
கூட்ட முடிவில் அந்தக் கூட்ட அமைப்பாளர் பாரதியாரிடம், " தங்களுக்கு என்ன பலகாரம் வேண்டும்? சொல்லுங்கள். பையனை அனுப்பி வாங்கி வரச் சொல்கிறோம்." என்றார்.
உடனே பாரதியார், "எனக்கு வீரப்பலகாரம் வேண்டும் வாங்கி வரச் சொல்லுங்கள்" என்றார்.
"வீரப்பலகாரமா? நாம் இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறதே?" என்று கூட்ட அமைப்பாளர் குழம்பிப் போனார். அங்கிருந்தவர்களும் விழித்தனர்.
உடனே பாரதி, "நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா? பஜ்ஜி, மெதுவடை, இட்லி போன்ற பலகாரங்கள் எல்லாம் கோழைப் பலகாரங்கள். பக்கோடா, முறுக்கு, சேவு போன்ற பலகாரங்கள் வீரப் பலகாரங்கள். இவைகளை வாயில் போட்டதும் "நொறுக்கு நொறுக்கு" என்றும் "கடக்கு முடக்கு" என்றும் பல்லிற்கு வீரமான வேலை கொடுக்கும் அல்லவா? எனவே இவை வீரப் பலகாரங்கள்தனே?" என்றார்.
- தேனி. எஸ். மாரியப்பன்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.