இணையத்தில் தமிழில் வெளியிடப்பட்ட எத்தனையோ தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blogs) கணக்கிட முடியாத அளவில் யார் பார்வையிலும் படாமல் முடங்கிப் போய்க் கிடக்கின்றன. இப்படி முடங்கிக் கிடக்கும் இந்த வலைப்பூக்களிலும் ஆன்மீகம், பகுத்தறிவு, இலக்கியம், தொழில் நுட்பம் என்று சமுதாய முன்னேற்றத்திற்கான பல முக்கிய விபரங்கள் இருக்கின்றன. இந்த வலைப்பூக்களையெல்லாம் அனைவரும் பார்க்க முடிவதில்லை. இந்த வலைப்பூக்களை அனைவருக்கும் அறிவிக்கவும், அனைவரையும் பார்வையிடச் செய்யும் நோக்கத்துடனும் தமிழ் வலைப்பூக்கள் பக்கம் வெளியிடப்படுகிறது.
இந்த தமிழ் வலைப்பூக்கள் பக்கத்திற்கு தமிழ் வலைப் பதிவர்களிடம் இருந்தும், பார்வையாளர்களிடம் இருந்தும் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட வலைப்பூவிற்கான இணையதள முகவரிகள் வரவேற்கப்படுகிறது. வலைப்பூவிற்கான முகவரிகளை முத்துக்கமலம் இணைய இதழுக்கு அனுப்பி வைக்கலாம்.
முத்துக்கமலம் பார்வைக்கு வந்த வலைப்பூக்களில் தேர்வு செய்யப்பட்ட வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படும்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.