யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
வணங்க வேண்டியவர்கள்
தவத்தாலும், வயதாலும், ஞானத்தாலும் உயர்ந்தவர்கள் தினமும் வணங்கத்தக்கவர்களாவர்.
எந்தக் குருவானவர் வேத உபதேசத்தால் துக்கத்தைப் போக்கடிக்கக் கூடியவரோ அவரைத் தினமும் வணங்கலாம்.
வணங்கக் கூடாதவர்கள்
நாத்திகன், கெட்ட மரியாதையுடையவன், நன்றி மறந்தவன், கிராமப் புரோகிதன், கள்வன், வஞ்சகன், பித்தன், மூர்க்கன், சூதாடுபவன், நடந்து கொண்டிருப்பவன், எண்ணெய் தேய்த்துக் கொண்டிருப்பவன், சுத்தமில்லாதவன், வேண்டுதல் செய்து கொண்டிருப்பவன், வித்தைக்காரன், ஜோதிடம் கூறி பிழைப்பவன் போன்றவர்களை வணங்கக் கூடாது.
சிரார்த்தம், தானம், தேவதா அர்ச்சனம், யஞ்ஞம், தர்ப்பணம் செய்பவனையும் வணங்கக் கூடாது.
கணவனைக் கொன்றவள், மாத விலக்கான பெண், விலைமாது போன்றவர்களை வணங்கக் கூடாது.
பாதகன், செய்நன்றி மறந்தவன், அதிகக் கோபம் கொண்டவன் போன்றவர்களையும் வணங்கக் கூடாது.
-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.