மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
சுபஸ்ரீஸ்ரீராம்
ஒருத்தி: என் மாமியாரு பச்சைக்கிளி மாதிரி...
மற்றவள்: அவ்வளவு அழகா?
ஒருத்தி: இல்ல. அவங்க சொன்னதையே சொல்லிகிட்டு இருப்பாங்க.
*****
ஒருத்தி: என் வீட்டுக்காரரு ரேஷன் கடைக்கு சுகர் வாங்க போனாலே எல்லோரும் ஷாக்காயிடுவாங்க.
மற்றவள்: உன் வீட்டுக்காரரு என்ன செக்கிங் இன்ஸ்பெக்டரா?
ஒருத்தி: அதல்லாம் இல்ல. அவர் சுகர் பேசண்டாச்சே...!
*****
ஒருத்தி: என் வீட்டுக்காரரு ஐபிஎல் 20 & 20 மேட்ச் பார்த்ததிலேர்ந்து பெட்டிக்கடை வியாபாரத்தைக் கூட ஒழுங்காச் செய்ய மாட்டேங்கிறாரு.
தோழி: அவ்வளவு கிரிக்கெட் பைத்தியமா?
ஒருத்தி: தினமும் 12 மணி நேரம் வேலை பாத்துக்கிட்டு இருந்தவரு, இப்ப 2 மணி நேரத்திலேயே வீட்டுக்கு வந்துடறாரு.
*****
ஒருவன்: என் மனைவி பாடினா எங்க காலனில எல்லோரும் என்னை அதிசயமாப் பார்ப்பாங்க
மற்றவன்: அவ்வளவு அழகான குரலா?
ஒருவன்: இல்லை. இவ பாட்டைத் தொடர்ந்து கேட்டு நான் எப்படி உயிரோட இருக்கேன்னுதான்.
*****
பல் டாக்டர்: வரவர இந்த பேஷண்ட் தொல்லை தாங்க முடியல
மற்றவன்: ஏன் என்னாச்சு?
பல் டாக்டர்: பல்வலின்னு வந்த ஒருவர் பல்செட்டைக் கழட்டிக் கொடுக்கிறாரு...
*****
ஒருவர்: ஏதாவது தேவைன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யணும் புரியுதா?
மற்றவர்: அப்ப உங்க பேங்க் பேலன்ஸ்லப் பாதியைக் கொடுத்துட்டு போங்க...!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.